ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாகும் மிஸ் கேரளா

  • IndiaGlitz, [Tuesday,December 20 2016]

கோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளராக மட்டுமின்றி பிசியான நாயகனாகவும் விளங்கி வரும் ஜி.வி.பிரகாஷ் நடித்த 'புரூஸ்லீ' வரும் பொங்கல் திருநாளில் வெளிவரவுள்ளது. இந்நிலையில் அவர் தற்போது 'அடங்காதே', ராஜீவ் மேனன் இயக்கும் படம் உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் நடித்து இசையமைத்து வரும் படங்களில் ஒன்று 4G. சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தை வெங்கட் பாக்கர் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக நடிக்க காயத்ரி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் கடந்த 2014ஆம் ஆண்டு மிஸ் கேரளா பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை மலையாள படங்களில் மட்டுமே நடித்து வந்த காயத்ரி இந்த படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.

More News

சென்னை மெரீனா கடற்கரையில் ஜெயலலிதா இட்லி

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது...

வங்கி ஊழியரை விரட்டி விரட்டி அடித்த பொதுமக்கள்.

கடந்த மாதம் 8ஆம் தேதி பிரதமரின் ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னர் ஏற்பட்ட பணத்தட்டுப்பாடு...

ரஜினியுடன் பணிபுரிய விரும்பிய பாலிவுட் பிரபலம்

திரையுலகில் நுழையும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ரஜினியுடன் ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்ற கனவு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஜெயலலிதா கட்டிகாத்த அதிமுகவை நிச்சயம் காப்பாற்றுவேன். தீபா அதிரடி பேட்டி

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கடந்த சில நாட்களாகவே ஊடகங்களில் பரபரப்பாக பேட்டி அளித்து வரும் நிலையில் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அவருடைய பேட்டி ஒளிபரப்பானது.

உலக சாதனை செய்த கிரிக்கெட் வீரருக்கு அமைச்சரால் நேர்ந்த அவலம்

மகாராஷ்டிராவை சேர்ந்த பிரனவ் தனவேத் என்ற கிரிக்கெட் வீரர், பள்ளி அளவிலான நடந்த போட்டி ஒன்றில் 1009 ரன்கள் அடித்து உலக சாதனை செய்தவர்