close
Choose your channels

எனக்கு நாடுதான் முக்கியம்… கையில் துப்பாக்கியை ஏந்திய மிஸ் உக்ரைன் அழகி!

Monday, February 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 5 ஆவது நாளாக போர் நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டு மக்கள் தங்களது சொந்த நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதற்காக தங்களது கைகளில் ஆயுதங்களை ஏந்தியுள்ளனர். மேலும் அந்நாட்டு பாதுகாப்பு துறை சார்பாக பெட்ரோல் எரிகுண்டுகளை தயாரிப்பது தொடர்பான வீடியோக்கள் பகிரப்பட்டு அந்த பயிற்சியை வைத்துக்கொண்டு பொதுமக்கள் பலரும் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த அடிப்படையில் உக்ரைன் நாட்டின் இராணுத்தைத் தவிர ஆங்காங்கே பொதுமக்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய பதற்றம் காரணமாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எல்லையை நோக்கி நடைபயணத்தையும் மேற்கொண்டுள்ளனர். சிலர் ரயில் நிலையங்களிலும் மெட்ரோ பாலத்திற்கு அடியிலும் மணிக்கணக்காகப் பதுங்கியிருப்பதையும் பார்க்க முடிகிறது.

இத்தனை நெருக்கடியான சூழலுக்கு மத்தியில் மிஸ் உக்ரைன் அழகி பட்டம் வென்ற ஒருவர் தன்னுடைய நாட்டைப் பாதுகாப்பதற்காக தற்போது இராணுவத்தில் இணைந்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு மிஸ் கிராண்ட் இண்டர்நேஷனல் பட்டத்தை உக்ரைன் நாட்டின் சார்பாக வென்ற அனஸ்டாசியா லென்னா என்பவர் தற்போது இராணுவ உடையை அணிந்துகொண்டு கையில் துப்பாக்கியை ஏந்தியபடி பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்த புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றுள்ள நிலையில் இதற்கு முன்பே தனது சொந்த நாட்டிற்காக 36 வயதான பிரபல டென்னிஸ் வீரர் செர்ஜி ஸ்டோகோவ்ஸ்கி என்பவரும் இராணுவத்தில் இணைந்ததும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.