சென்னையில் பிரபல கார் ரேஸ் வீரர் மனைவியுடன் மரணம்

  • IndiaGlitz, [Saturday,March 18 2017]

தமிழகத்தை சேர்ந்த பிரபல கார் ரேஸ் வீரர் அஸ்வின் சுந்தர் சென்னை மெரீனா அருகே நடந்த கார் விபத்து ஒன்றில் மரணம் அடைந்தார். அவருடன் காரில் சென்றிருந்த அவருடைய மனைவியும் இந்த விபத்தில் மரணம் அடைந்தார்
இன்று அதிகாலை 3.30 மணி அளவில் அஸ்வின் சுந்தர் மற்றும் அவரது மனைவி நிவேதிதா ஆகியோர் தங்களுடை பி.எம்.டபிள்யூ காரில் பட்டினப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தனர். கார் அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட அதிக வேகத்தில் சென்று கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் திடீரென கார் அஸ்வின் கட்டுப்பாட்டை மீறி சாலையோரத்தில் இருந்த மரத்தில் பயங்கர சத்தத்துடன் மோதியது.
இந்த விபத்தில் கார் தீப்பற்றி எரிந்ததாகவும், காரில் இருந்த இருவரும் வெளியே வரமுடியாமல் காருக்குள்ளேயே மரணம் அடைந்ததாகவும் காவல்துறையினர் தரப்பினர் கூறுகின்றனர்.
இந்த விபத்து நடந்தபோது வழக்கம்போல் அந்த பகுதியில் இருந்தவர்கள் காரின் உள்ளே இருந்தவர்களை காப்பாற்ற முயலாமல் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து கொண்டிருந்தனர் என்பதும் வருத்தத்துடன் குறிப்பிடத்தக்கது.

More News

உலக அளவில் 11வது இடத்தை பிடித்தது 'பாகுபலி 2'

பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா நடிப்பில் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி 2' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி 24 மணி நேரத்தில் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது என்பதை பார்த்தோம்

ரசிகரின் வேண்டுகோளை நிறைவேற்றிய சூர்யாவுக்கு விஜய் நன்றி

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் சூர்யா தனது 'சி 3' படத்தின் புரமோஷனுக்காக கேரளா சென்றிருந்தபோது, மாற்றுத்திறனாளி விஜய் ரசிகர் ஒருவர், தனது கையினாலே வரைந்த விஜய்யின் ஓவியத்தை சூர்யாவிடம் கொடுத்து அதை விஜய்யிடம் சேர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

'பாகுபலி 2' படத்தின் இசை வெளியீட்டு தேதி

இந்தியாவின் மிகப் பிரமாண்டமான திரைப்படங்களில் ஒன்றாகிய 'பாகுபலி 2' படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பது அந்த படத்தின் டிரைலருக்கு கிடைத்த வெற்றியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சமந்தா-நாகசைதன்யா ஜோடி சேர வாய்ப்பில்லை. வதந்திக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி

பிரபல நடிகை சமந்தாவும், பிரபல நடிகர் நாக சைதன்யாவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதும் விரைவில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

ஒரே மாதத்தில் உடைந்தது தீபா கட்சி. தனிக்கட்சி ஆரம்பிக்கின்றார் கணவர்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, சமீபத்தில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார்