close
Choose your channels

பிரபல நடிகரின் கட்சியில் இணைந்த தமிழக முன்னாள் தலைமை செயலாளர்

Monday, February 11, 2019 • தமிழ் Comments

தமிழகத்தின் முன்னாள் தலைமை செயலாளராக பணியாற்றிய ராம்மோகன் ராவ், பிரபல தெலுங்கு நடிகரின் கட்சியில் இணைந்துள்ளார்.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழகத்தின் தலைமை செயலாளராக இருந்தவர் ராம மோகன ராவ். ஜெயலலிதா மறைந்த பின்னர் இவர் மீது சர்ச்சைக்குரிய புகார்கள் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தலைமைச்செயலாளராக இவர் பணிபுரிந்தபோதே இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவர் ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில்  பிரபல தெலுங்கு நடிகர் பவன்கல்யாண் நடத்தி வரும் ஜன சேனா கட்சியில் ராம மோகன ராவ் இன்று இணைந்துள்ளார். அவர் அக்கட்சியின் அரசியல் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.