இளம் ஹீரோவின் அடுத்த படத்தில் நான்கு ஹீரோயின்கள்!

தமிழ் திரையுலகின் இளம் ஹீரோவின் அடுத்த திரைப்படத்தில் நான்கு நாயகிகள் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூதுகவ்வும், தெகிடி உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் அசோக்செல்வன் என்பதும் இவர் நடித்த ’ஓ மை கடவுளே’ என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. சமீபத்தில் வெளியான ’சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற திரைப்படத்தில் இவருடைய கேரக்டர் பெரிதாக பேசப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அசோக்செல்வன் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் நான்கு ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இரா. கார்த்திக் என்பவர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் அசோக் செல்வன், ரிதுவர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் மற்றும் ஸ்வேதா ஆகியோர் நடிக்க உள்ளனர். இந்த படத்தை வியாகாம் 18 ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வரும் 7ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே சுந்தர் சி இயக்கும் அடுத்த படத்தில் 4 ஹீரோயின்கள் நடித்து வரும் நிலையில் தற்போது அசோக் செல்வனின் அடுத்த படத்திலும் 4 ஹீரோயின்கள் நடிக்கவுள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.

More News

எங்கள் வீட்டின் தெய்வம் இவர்: மதுரை முத்துவின் உருக்கமான பதிவு!

எங்கள் வீட்டின் தெய்வம் இவர் என மதுரை முத்துவின் சமீபத்திய பதிவை அடுத்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். 

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தை இயக்குவது இந்த பிரபலமா? செம காம்போ என ரசிகர்கள் உற்சாகம்!

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் படத்தை பிரபல இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாக வெளிவந்துள்ள தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

திடீரென நிறுத்தப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் லைவ்: என்ன காரணம்?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இருபத்தி நான்கு மணி நேரமும் ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்புடன் கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி தொடங்கியது என்பதும் இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து

கமல், ரஜினி பட நடிகையின் மகளுக்கு திருமணம்: ரசிகர்கள் வாழ்த்து!

கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகையின் மகளுக்கு லண்டனில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் சென்னையில் தென்னிந்திய ஸ்டைலில் திருமணம் மற்றும்  வரவேற்பு நடைபெற

'கடைசி விவசாயி' படத்தில் விஜய்சேதுபதி நடிக்க வேண்டாம் என கூறினேன்: இயக்குனர் மணிகண்டன்

விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கடைசி விவசாயி' திரைப்படம் வரும் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிக்க வேண்டாம்