இந்தியாவில் கொரோனா: பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்ததால் பரபரப்பு

உலகம் முழுவதும் மனித இனத்தையே அழித்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் தாக்கி, ஏற்கனவே மூன்று உயிர்களை பலி வாங்கிய நிலையில், தற்போது நான்காவதாக ஒருவர் உயிரிழந்ததாக வெளிவந்துள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஏற்கனவே டெல்லி, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒருவரும் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும், இதனையடுத்து இந்தியாவில் கொரோனா தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாபை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவர் சற்று முன்னர் மரணம் அடைந்துவிட்டதாகவும் பஞ்சாப் மாநிலம் உறுதி செய்துள்ளது. இதனை அடுத்து பஞ்சாபில் பொது போக்குவரத்தை நிறுத்தவும் 20 பேருக்கு மேல் கூடவும் தடை விதித்து பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் இந்தியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

More News

நடக்கக்கூட இடமில்லாத ரங்கநாதன் தெருவில், கிரிக்கெட் விளையாடிய ஊழியர்கள்

சென்னையின் பிஸியான இடங்களில் மிகவும் முக்கியமானது தி நகர் ரங்கநாதன் தெரு. இந்த தெருவில் தான் முக்கிய ஜவுளி கடைகள் மற்றும் நகைக் கடைகள் இருப்பதாலும்

நாசா விஞ்ஞானியாக நடிக்கும் பிரபல தமிழ் நடிகர்!

கோலிவுட் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி தனது அடுத்த படத்தில் நாசா விஞ்ஞானியாக நடித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது

கொரோனா பாதிப்பு அடைந்தவர்களுக்காக ரூ.7.42 கோடி நிதியுதவி செய்த நட்சத்திர தம்பதி

இந்தியா உள்பட உலகம் முழுவதும் 125 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது 

"ஒரே நேரத்தில் இத்தனை உயிரிழப்புகளை பார்த்ததில்லை".. கதறும் இத்தாலி மருத்துவர்கள்..! #COVID19

"போர் களத்தில் நடந்து செல்வது போல உள்ளது. ஒரே நேரத்தில் இத்தனை இறப்புகளை பார்த்ததில்லை" என மருத்துவர்கள் வருத்தத்துடன் கூறுகின்றனர்.   

நிர்பயா பாலியல் குற்றவாளிகளுக்கு நாளை தூக்குத் தண்டனை உறுதி!!! நீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட 4 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டது