லாக்டவுனில் ரகசியத் திருமணம்… உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Friday,October 22 2021]

லாக்டவுனில் தனக்கும் தனது காதலர் கோரி டிரான் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றதாக ஸ்லம்டாக் மில்லியனர் புகழ் நடிகை ஃப்ரீடா பின்டோ தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் பாலிவுட் ரசிகர்களிடையே  கடும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இசைப்புயல் ஏர்.ஆர்.ரஹ்மான் இசையில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியாகி பாலிவுட்டில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ஸ்லம்டாக் மில்லியனர். இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்தவர்தான் நடிகை ஃப்ரீடா பின்டோ. இதைத் தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம்வந்த அவர் தற்போது ஹாலிவுட் சினிமாக்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஃப்ரீடா பின்டோ புகைப்படக் கலைஞரான கோரி டிரான் என்பவரை காதலித்து வருவதாகக் கூறப்பட்டது. மேலும் கடந்த ஜுன் மாதம் தான் கர்ப்பம் அடைந்திருப்பதையும் அவர் தனது சோஷியல் மீடியாவில் தெரிவித்து இருந்தார். இதையடுத்து திருமணம் செய்துகொள்ளாமலே கர்ப்பமா? என நடிகை ஃப்ரீடாவை இந்திய ரசிகர்கள் பலர் கடுமையாக விமர்சித்து இருந்தனர்.

தற்போது டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஃப்ரீடா கொரோனா காலத்தில் தானும் கோரி டிரானும் எளிமையாக திருமணம் செய்துகொண்டோம். திருமணத்திற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை. எங்களது திருமணம் கலிபோர்னியாவில் நடைபெற்றது. காலையில் திருமணம் முடிந்த பின்பு மதியம் வீடு திரும்பிய நாங்கள் ஓய்வு எடுத்தோம் எனக் கூறியுள்ளார்.

நடிகை ஃப்ரீடா பின்டோவின் திருமணத் தகவலை அடுத்து அவர் வெள்ளைநிற பிகினியுடன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் தற்போது சோஷியல் மிடியாவில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Shared post on Time

Your Grain dardarkom Dog - Contact Us - Market Master Ltd.

Artificial intelligence: The 3 big trends to iptv4sat in 2017

More News

உதயநிதி எம்.எல்.ஏவை சந்தித்த 'வலிமை' தயாரிப்பாளர்!

நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது தெரிந்ததே. உதயநிதி ஸ்டாலின்

அன்புக்குரியவர் பிறந்தநாளில் கேக் ஊட்டும் நடிகை ரோஜா!

நடிகையும் நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜா தனது அன்புக்குரியவர் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு கேக் ஊட்டும் காட்சிகளின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு உண்மையை ஒத்துக்குறாங்கன்னா, பல உண்மைகளை மறைக்குறாங்கன்னு அர்த்தம்: 'ஜெய்பீம்' டிரைலர்

சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜெய்பீம்' என்ற திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

திருமண நாளை கொண்டாடும் சூர்யா பட நடிகை… இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு!

ஒரு காலத்தில் தமிழ் ரசிகர்களின் பேவரிட் ஹீரோயினாக இருந்தவர்

விக்னேஷ் சிவனை திருமணம் செய்வதற்கு முன் நயன்தாராவுக்கு முதல் திருமணமா?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, விக்னேஷ் சிவனை திருமணம் செய்வதற்கு முன்னர் மரத்தை திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.