லாக்டவுனில் ரகசியத் திருமணம்… உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Friday,October 22 2021]

லாக்டவுனில் தனக்கும் தனது காதலர் கோரி டிரான் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றதாக ஸ்லம்டாக் மில்லியனர் புகழ் நடிகை ஃப்ரீடா பின்டோ தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் பாலிவுட் ரசிகர்களிடையே  கடும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இசைப்புயல் ஏர்.ஆர்.ரஹ்மான் இசையில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியாகி பாலிவுட்டில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ஸ்லம்டாக் மில்லியனர். இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்தவர்தான் நடிகை ஃப்ரீடா பின்டோ. இதைத் தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம்வந்த அவர் தற்போது ஹாலிவுட் சினிமாக்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஃப்ரீடா பின்டோ புகைப்படக் கலைஞரான கோரி டிரான் என்பவரை காதலித்து வருவதாகக் கூறப்பட்டது. மேலும் கடந்த ஜுன் மாதம் தான் கர்ப்பம் அடைந்திருப்பதையும் அவர் தனது சோஷியல் மீடியாவில் தெரிவித்து இருந்தார். இதையடுத்து திருமணம் செய்துகொள்ளாமலே கர்ப்பமா? என நடிகை ஃப்ரீடாவை இந்திய ரசிகர்கள் பலர் கடுமையாக விமர்சித்து இருந்தனர்.

தற்போது டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஃப்ரீடா கொரோனா காலத்தில் தானும் கோரி டிரானும் எளிமையாக திருமணம் செய்துகொண்டோம். திருமணத்திற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை. எங்களது திருமணம் கலிபோர்னியாவில் நடைபெற்றது. காலையில் திருமணம் முடிந்த பின்பு மதியம் வீடு திரும்பிய நாங்கள் ஓய்வு எடுத்தோம் எனக் கூறியுள்ளார்.

நடிகை ஃப்ரீடா பின்டோவின் திருமணத் தகவலை அடுத்து அவர் வெள்ளைநிற பிகினியுடன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் தற்போது சோஷியல் மிடியாவில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Shared post on Time

Your Grain dardarkom Dog - Contact Us - Market Master Ltd.

Artificial intelligence: The 3 big trends to iptv4sat in 2017