தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால் 4 ஆயிரத்திற்கும் குறைவான கொரோனா பாதிப்பு!!!

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகத் தமிழகச் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். கடந்த ஜுலை மாதத்தில் 6 ஆயிரத்தையும் தாண்டிய கொரோனா பாதிப்பு தற்போது தமிழக அரசின் துரித நடவடிக்கையால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்திய அளவில் கொரோனாவில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது தமிழகத்தில் அதிகமாகக் காணப்படுவதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது நிலைமை மேலும் சீராகி வருவதாகத் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4,929 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் புதிய பாதிப்பு எண்ணிக்கை 3,914 ஆக பதிவாகி இருக்கிறது. நேற்றைய கொரோனா இறப்பு எண்ணிக்கை தமிழகத்தில் 56 ஆக குறைந்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் கீழ் பதிவாகி வந்த நிலையில் நேற்று 4 ஆயிரத்துக்கும் குறைவாக பதிவாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறது. இதனால் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 6,87,400 எனக் கணக்கிடப் பட்டுள்ளது.

அதேபோல இந்திய அளவிலும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இறப்பு எண்ணிக்கையும் கடந்த 12 நாட்களாக 1000 க்கும் கீழ் இருப்பதாக இந்தியச் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். இதனால் உலக அளவில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை விட இந்தியா மிகவும் குறைவான எண்ணிக்கையையே கொண்டிருக்கிறது.

More News

ஐஸ்வர்யாவுக்காக மீண்டும் இணையும் ஜெயம் ரவி மற்றும் தமன்னா!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை ஜெயம் ரவி மற்றும் தமன்னா வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 

வெளியேறினார் ரேகா: வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரேகா வெளியேறிவிட்டதை அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்றால் உறுதி செய்யப்பட்டுள்ளது

அறிமுக இயக்குனருக்கு ஆதரவு கொடுத்த விஜய் மனைவி: வைரலாகும் புகைப்படம்

நடிகை வரலட்சுமி இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் என்றும் அவர் இயக்கும் முதல் திரைப்படத்தின் டைட்டில் 'கண்ணாமூச்சி' என்றும் இந்தத் திரைப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்

ரஜினியுடன் கூட்டணியா? அமித்ஷாவின் அதிரடி பதில்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்கி அரசியலில் குதிக்க இருப்பதாக கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்தார்

உங்களுக்கு எது சொன்னா சந்தோஷம்: கமல் கேள்விக்கு சுரேஷ் அளித்த பதில்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தோன்றும் நாளான இன்று சுவராஸ்யமாக இருக்குமோ என்ற சந்தேகத்தை இன்றைய மூன்று புரமோக்களும் கேள்வி எழுப்பியுள்ளன.