ஏப்ரல் 26 முதல் திரையரங்குகள், ஜிம்கள், பார்கள் இயங்க அனுமதியில்லை: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதை அடுத்து புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று ஏற்கனவே செய்தி வெளிவந்த நிலையில் சற்று முன் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் திரை அரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கூட்ட அரங்குகள் இயங்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஏப்ரல் 26-ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் ஆகியவை இயங்க அனுமதி இல்லை.

பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை. மளிகை காய்கறி கடைகள் மற்றும் இதர அனைத்து கடன்களையும் உரிய வழிமுறைகளுடன் வழக்கம்போல் செயல்படலாம். இருப்பினும் வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை. 

மேலும் சென்னை மாநகராட்சி உள்பட அனைத்து மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில் உள்ள அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை.

அனைத்து உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படும்.

அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. 

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி.

இறுதி ஊர்வலம் மற்றும் அதைச்சார்ந்த சடங்குகளில் 25 பேருக்கு மட்டுமே அனுமதி. 

ஐடி ஊழியர்கள் 50 சதவீத பணியாளர்கள் வீட்டில் இருந்து கண்டிப்பாக பணி செய்ய வேண்டும்.

சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கு மட்டும் அனுமதி உண்டு.

புதுச்சேரி தவிர ஆந்திரா கர்நாடகா கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் நபர்கள் இபாஸ் கண்டிப்பாக வேண்டும். 

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News

இது போலி, யாரும் நம்பாதீங்க: பதறியபடி அறிவிப்பு வெளியிட்ட சிபிராஜ்!

நடிகர் சிபிராஜ் பெயரில் வெளிவந்த விளம்பரம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருவதை அடுத்து அந்த விளம்பரத்தை தான் கொடுக்கவில்லை என்றும் அது முழுக்க முழுக்க போலியான விளம்பரம் என்றும் சிபிராஜ்

ஜார்ஜியா படப்பிடிப்பு நிறைவு நாளில் ரசிகர்களுக்காக விஜய் செய்த விஷயம்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 65' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஜார்ஜியா நாட்டில் நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 

ஆக்சிஜன் அவசர தேவையா? உதவி எண் அறிவித்த தமிழக அரசு!

தமிழகத்தில் தினமும் கொரோனா வைரசால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அவர்களுக்கு செலுத்துவதற்கு

அடுத்த மார்ச் 2022 லும் கொரோனா மிரட்டுமா? பதைக்க வைக்கும் மருத்துவரின் வீடியோ விளக்கம்!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி வெறும் 11 என்ற எண்ணிக்கையி&

1 ரூபாயை பெற்றுக்கொண்டு ஆக்சிஜன் சிலிண்டரை நிரப்பிக் கொடுக்கும் நல்ல உள்ளம்!

கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் சிலிண்டரை  1 ரூபாயைப் பெற்றுக்கொண்டு உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு நபர் நிரப்பிக் கொடுத்து வருகிறார்.