திங்கள் முதல் முழுமையான ஊரடங்கு: நாளை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி!

  • IndiaGlitz, [Saturday,May 22 2021]

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் நாளை மறுநாள் உடன் இந்த ஊரடங்கு உத்தரவு முடிவடைவதை அடுத்து சற்றுமுன் தமிழக அரசு மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி திங்கள் முதல் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாகவும் பொது நலன் கருதி நாளை ஒருநாள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதிக்கபடுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. நாளை மறுநாள் முதல் ஊரடங்கில் திறக்க அனுமதிக்கப்படும் கடைகள், நிறுவனங்கள் குறித்த தகவல் இதோ:

* மருந்தகங்கள்‌, நாட்டு மருந்து கடைகள்‌, கால்நடை மருந்தகங்கள்‌

* பால்‌ விநியோகம்‌, குடிநீர்‌ மற்றும்‌ தினசரி பத்திரிக்கை விநியோகம்‌

* பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள்‌, பழங்கள்‌, தோட்டக்கலைத்‌துறை மூலமாக சென்னை நகரத்திலும்‌, அனைத்து மாவட்டங்களிலும்‌ சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன்‌ இணைந்து வாகனங்கள்‌
மூலமாக வழங்கப்படும்‌

* தலைமைச்‌ செயலகத்திலும்‌, மாவட்டங்களிலும்‌, அத்தியாவசியத்‌ துறைகள்‌ மட்டும்‌ இயங்கும்‌

* தனியார்‌ நிறுவனங்கள்‌, வங்கிகள்‌, காப்பீட்டு நிறுவனங்கள்‌, தகவல்‌ தொழில்‌ நுட்ப நிறுவனங்கள்‌ போன்றவற்றில்‌ பணிபுரிவோர்‌, வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

* மின்னணு சேவை காலை 08.00 மணி முதல்‌ மாலை 06.00 வரை இயங்கலாம்‌.

* உணவகங்களில்‌ காலை 6.00 மணி முதல்‌ 10.00 மணி வரையிலும்‌, நண்பகல்‌ 12.00 மணி முதல்‌ மதியம்‌ 3.00 மணி வரையிலும்‌, மாலை 6.00 மணி முதல்‌ இரவு 9.00 மணி வரையிலும்‌ பார்சல்‌ சேவை மட்டும்‌ அனுமதிக்கப்படுகிறது.

* பெட்ரோல்‌, டீசல்‌ பங்க்குகள்‌ வழக்கம்‌ போல்‌ இயங்கும்‌

* ஏடி.எம்‌. மற்றும்‌ அவற்றிற்கான சேவைகள்‌ அனுமதிக்கப்படும்‌. வேளாண்‌ விளை பொருட்கள்‌ மற்றும்‌ இடுபொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும்‌

* சரக்கு வாகனங்கள்‌ செல்லவும்‌, அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ கொண்டு செல்லவும்‌ அனுமதிக்கப்படும்‌.

* உரிய மருத்துவக்‌ காரணங்கள்‌ மற்றும்‌ இறப்புகளுக்காக மட்டும்‌ உரிய மருத்துவக்‌ காரணங்கள்‌ மற்றும்‌ இறப்புகளுக்காக மட்டும்‌ மாவட்டம்‌ விட்டு மாவட்ட செல்ல இ-பதிவுடன்‌ அனுமதிக்கப்படும்‌

* மருத்துவக்‌ காரணங்களுக்காக மாவட்டத்திற்குள்‌ பயணிக்க இ-பதிவு தேவையில்லை.

* செய்தி மற்றும்‌ ஊடக நிறுவனங்கள்‌ வழக்கம்‌ போல்‌ இயங்கலாம்‌.

*. தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர்‌ செயல்முறை தொழிற்சாலைகள்‌ அத்தியாவசியப்‌ பொருட்கள்‌, மருத்துவ உபகரணங்கள்‌ தயாரிக்கும்‌ தொழிற்சாலைகள்‌

* பொது மக்கள்‌ நலன்‌ கருதி, இன்று (22-5-202] இரவு 9-00 மணிவரையிலும்‌, நாளை 23.05.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள்‌ மட்டும்‌ காலை 06.00 மணி முதல்‌ இரவு 09.00 மணி வரை அனைத்துக்‌
கடைகளும்‌ திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.

* மால்கள்‌ திறந்திட அனுமதி கிடையாது.

* வெளியூர்‌ செல்லும்‌ பயணிகளின்‌ நலன்‌ கருதி, இன்று (22.05.2027) மற்றும்‌ நாளை (23.05.2027) தனியார்‌ மற்றும்‌ அரசு பேருந்துகள்‌ வெளியூர்‌ செல்வதற்கு அனுமதிக்கப்படும்‌.

பொது மக்கள்‌ நலன்‌ கருதி, இன்று (22-5-202] இரவு 9-00 மணிவரையிலும்‌, நாளை 23.05.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள்‌ மட்டும்‌ காலை 06.00 மணி முதல்‌ இரவு 09.00 மணி வரை அனைத்துக்‌
கடைகளும்‌ திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.

* வெளியூர்‌ செல்லும்‌ பயணிகளின்‌ நலன்‌ கருதி, இன்று (22.05.2027) மற்றும்‌ நாளை (23.05.2027) தனியார்‌ மற்றும்‌ அரசு பேருந்துகள்‌ வெளியூர்‌ செல்வதற்கு அனுமதிக்கப்படும்‌.

More News

தமிழகத்தில் நாளை ஊரடங்கு இல்லையா? என்ன காரணம்?

தமிழகத்தில் கடந்த மே 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

தொடரும் ஊரடங்கு...! ரயில்கள் சேவை ரத்து...!

கொரோனா பரவல் மற்றும் புயல் காரணமாக ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்கள்  சேவையை ரத்து செய்துள்ளது

கொரோனா ஆன்டிபாடியை அளக்க புது கருவி? பயன்படுத்துவது எப்படி?

கொரோனா வைரஸ் உடலில் புகுந்தவுடன் சுவாச உறுப்பை காலி செய்து விடுகிறது.

பிரபலமாக திருநங்கைகள் குறித்து அவதூறு வீடியோ......! தர்மஅடி வாங்கிய டிக்டாக் திவ்யா...!

தான் யுடியூப்-பில் பிரபலமாகமாக வேண்டும் என்பதற்காக திருநங்கைகள் குறித்து அவதூறாக வீடியோ பதிவிட்ட, டிக்டாக் திவ்யா தர்ம அடி வாங்கியுள்ளார்.

ஆம்புலன்ஸ் வாகனத்தில் சிலிண்டர் வெடிப்பு… கோவையில் நடந்த கொடூரம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத வகையில் தொடர்ந்து தமிழக மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை நிலவி வருகிறது