close
Choose your channels

தளபதியுடன் எனது பயணம் தொடங்கியது: பிரபல நடிகையின் டுவீட்

Friday, June 1, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை வரும் தீபாவளி அன்று திரையில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதால் இந்த படத்தின் பணிகள் இரவுபகலாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் விஜய்யுடன் நாயகி கீர்த்திசுரேஷ் கலந்து கொண்ட காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். தற்போது இந்த படத்தின் இன்னொரு நாயகியான வரலட்சுமி சரத்குமார் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: இன்று முதல் தளபதி 62 படத்தில் விஜய் அவர்களுடன் எனது பயணம் தொடங்குகிறது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் எனக்கு ஆச்சரியம் தரத்தக்க லுக்கை கொடுத்துள்ளார். ஆனால் நாங்கள் இப்போதைக்கு இந்த லுக்கை வெளியிட விரும்பவில்லை என்று கூறியுள்ளார்

விஜய், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துவரும் இந்த படம் க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.