இன்று முதல் 'யானை' படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்: ரசிகர்கள் ரியாக்சன் என்ன?

  • IndiaGlitz, [Wednesday,July 06 2022]

அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான ‘யானை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். கமல்ஹாசனின் ’விக்ரம்’ திரைப்படத்திற்குப் பின்னர் திரையரங்குகளில் நல்ல வசூலை பெற்று தரும் படமாக ‘யானை’ உள்ளது என திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ‘யானை’ திரைப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 36 நிமிடங்கள் என இருக்கும் நிலையில் இன்று முதல் இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘யானை’ திரைப்படத்தின் ஐந்து நிமிட காட்சிகள் கட் செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து இந்த படம் கூடுதல் விறுவிறுப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. எந்தெந்த காட்சிகள் கட் செய்யப்பட்டன என்பது குறித்து படக்குழுவினர் தகவலை வெளியிடவில்லை. இந்த மாற்றம் இன்று முதல் திரையரங்குகளில் திரையிடப்படும் ‘யானை’ படத்தில் இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்த போது சில இடங்களில் ‘யானை’ திரைப்படத்தின் வேகம் குறைவது போன்று இருந்தது என்றும் ஆனால் இனிமேல் படத்தை பார்க்கும்போது ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே வேகம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் சுமார் 1000 திரையரங்குகளில் வெளியான ‘யானை’ திரைப்படம் கடந்த திங்கள் வரை 12 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

More News

என் வாழ்க்கையில் நான் பார்த்த மிகச்சிறந்த நடிகர்: விஜய்சேதுபதியை பாராட்டியது யார் தெரியுமா?

என் வாழ்க்கையில் நான் பார்த்த மிகச் சிறந்த நடிகர் நீங்கள் தான் என விஜய்சேதுபதியை முன்னணி நடிகர் ஒருவர் பாராட்டிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

தளபதி விஜய் அறிவித்த 3 முக்கிய அறிவிப்புகள்: ரசிகர்கள் மகிழ்ச்சி

தளபதி விஜய் தரப்பில் இன்று மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டதை அடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று உள்ளனர். 

ரம்யா பாண்டியனின் மூன்லைட் போட்டோஷூட்: பச்சை காஸ்ட்யூமில் செம கிளாமர்!

தமிழ் திரையுலக நடிகைகளில் ஒருவரான ரம்யா பாண்டியன் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் செய்துவரும் நிலையில் கடந்த 2 நாட்களாக அவர் மூன்லைட்

விஜய் மக்கள் இயக்கம்: இன்று விஜய் எடுக்கும் முக்கிய முடிவு!

விஜய் மக்கள் இயக்கம் குறித்து இன்று தளபதி விஜய் ஒரு முக்கிய முடிவை எடுக்க இருப்பதாக கூறப்படுவதால் விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் 'தி வாரியர்' புரமோஷன் நிகழ்ச்சி: கலந்து கொள்ளும் பிரமுகர்கள் யார் யார் தெரியுமா?

 நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தி வாரியர்'. பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி மற்றும் கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள இந்த படத்தின்