தமிழகத்தின் முக்கிய நகரில் நாளை முதல் முழு ஊரடங்கு: கலெக்டர் அதிரடி அறிவிப்பு 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகின்றது என்பதும் இன்று மட்டும் தமிழகத்தில் 6785 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே. இதனால் தமிழகத்தின் மொத்த பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரும் 31-ம் தேதியுடன் ஆறாம் கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில் அதற்கு மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற அச்சம் தற்போது பொதுமக்களிடையே எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் விரைவில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று கூறப்படுவதால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றாகிய கோவையில் நாளை மாலை 5 மணி முதல் ஜூலை 27-ஆம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு என அம்மாவட்ட ஆட்சியர் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு காரணமாக கோவை மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

மார்பகம் குறித்து கருத்து தெரிவித்த நபருக்கு பதிலடி கொடுத்த் நடிகை!

இந்த கொரோனா விடுமுறையில் பெரும்பாலான நடிகர் நடிகைகள் தங்களது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை

தோசை சுட்டு கொடுத்த அம்மாவை துப்பாக்கியால் சுட்ட மகன்: பரபரப்பு தகவல் 

பசியாக இருக்கும் மகனுக்கு சுடச்சுட தோசை சுட்டுக் கொடுத்த அம்மாவை அவரது மகன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழகத்தில் இன்று 6,785 பேர் பாதிப்பு, 6,504 பேர் மீண்டனர்: இரண்டுமே புதிய சாதனை

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,785 என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமல், சூரி மீன்படித்த விவகாரம்: 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் அனுமதியின்றி மீன் பிடித்ததாக நடிகர்கள் சூரி மற்றும் விமல் ஆகியோர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

கொரோனா வைரஸ் ஹேர்பின் வடிவத்துக்கு மாறுகிறதா??? சுவாரசியம் நிறைந்த ஆய்வுத் தகவல்!!!

கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் வேகத்தை விட அதிவேகமாக அதன் தன்மை மற்றும் மரபணு போன்றவை மாற்றம் அடைந்து வருகின்றன என்பதை The Lancet ஆய்வு இதழ் எடுத்துக் காட்டியிருந்தது.