ஜி.வி.பிரகாஷின் 'தியாகம் செய்வோம் வா' முழு பாடலின் வரிகள்

  • IndiaGlitz, [Friday,March 10 2017]

பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையில் அருண்காமராஜ் வரிகளில் இருவரும் இணைந்து பாடிய 'தியாகம் செய்வோம் வா' பாடல் சற்று முன்னர் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. உணர்ச்சி பெருக்குள்ள இந்த பாடலின் வரிகள் இதோ:

தியாகம்செய்வோம்வா

உறங்காதே தமிழா
இறங்காதே தமிழா
கலங்காதே தமிழா
கசங்காதே தமிழா

உறங்காதே தமிழா
இறங்காதே தமிழா
கலங்காதே தமிழா
கசங்காதே தமிழா

தியாகிகள் நாங்கள்
தமிழர்கள் நாங்கள்
அன்னியன் வந்தால்
அடக்குவோம் நாங்கள்

வளங்கள் கொண்டோம்
சுரண்டத்தானா?
சுகங்கள் எல்லாம்
மழுங்கத்தானா?
திட்டங்கள் என்ன
சட்டங்கள் என்ன
பலகோடி உயிரின்
பலியில் தானா?
சில லட்சம் பேர்கள்
சிறகினில் பறக்க
பலகோடி பேரின்
சிறகையா முறிக்க?

தியாகம் செய்வோம் வா
தியாகம் செய்வோம் வா தாயே
தியாகம் செய்வோம் வா
தியாகம் செய்வோம் வா
தியாகம் செய்வோம் வா தமிழா
தியாகம் செய்வோம் வா

உறங்காதே தமிழா
இறங்காதே தமிழா
கலங்காதே தமிழா
கசங்காதே தமிழா

கற்க கசடற கற்பவை கற்றபின்
துணிந்து நிற்க நமக்குத் தக
வதைகளை தடுத்திட
வரங்களை படைத்திட
இளமையின் இச்சைகள்
திசை திரும்புமடா

உனக்கென உழைத்திடும்
உணவினை படைத்திட
உழுபவன் தோள்களில்
வலு கூட்டிட வா
பிரிவினையை பிறர் வினையை
அறியாமை, அகவுணர்வை வேற்றுமையை
வேஷங்களை, தீச்சொல்லை
தீயவற்றை துறப்போம், மறப்போம்
தியாகம் செய்வோம் வா

தியாகம் செய்வோம் வா
தியாகம் செய்வோம் வா தாயே
தியாகம் செய்வோம் வா
தியாகம் செய்வோம் வா
தியாகம் செய்வோம் வா தமிழா
தியாகம் செய்வோம் வா

சொர்க்கத்தின் வாசலில்
சுரங்கத்தை போட்டுத்தான்
திக்கற்று மாறுமே
நெடுவாசல் போலவே
இதை மாற்ற நமக்கொரு
தருவாயில் இருக்கிறோம்
தருவாயும் தவறினால்
நரகத்தின் வாசலில்
தவிப்போமே நாமெல்லாம்
தமிழா....தமிழா

தியாகிகள் நாங்கள்
தமிழர்கள் நாங்கள்
அன்னியன் வந்தால்
அடக்குவோம் நாங்கள்

வளங்கள் கொண்டோம்
சுரண்டத்தானா?
சுகங்கள் எல்லாம்
மழுங்கத்தானா?
திட்டங்கள் என்ன
சட்டங்கள் என்ன
பலகோடி உயிரின்
பலியில் தானா?
சில லட்சம் பேர்கள்
சிறகினில் பறக்க
பலகோடி பேரின்
சிறகையா முறிக்க?

தவறான நீதி
தரும் எங்கள் பூமி
இருள் பாதை தேடி
இனிபோகும் கூடி
எதுவாசல் என்றே
தெரியாமல் நாளும்
திரிந்தோமே தமிழா
திசைமாறு தமிழா

தியாகம் செய்வோம் வா
தியாகம் செய்வோம் வா தாயே
தியாகம் செய்வோம் வா
தியாகம் செய்வோம் வா
தியாகம் செய்வோம் வா தமிழா
தியாகம் செய்வோம் வா

More News

தீபாவளிக்கு முன்பே ரஜினியின் '2.0' படக்குழு தரும் செம விருந்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்தியாவின் மிக அதிக பட்ஜெட்டில் லைகா  தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் '2.0'...

திருட்டு இணையதளத்திற்கு விஷால் நேரடி சவால்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் 5 அணிகள் போட்டியிடுகின்றன. அவற்றில் ஒன்றுதான் விஷால் தலைமையிலான அணி. நடிகர் சங்கம் போலவே தயாரிப்பாளர் சங்கத்திலும் பல நடவடிக்கைகள் எடுத்து அனைத்து தயாரிப்பாளர்களையும் காப்பாற்றுவோம் என்று விஷால் அணியினர் வாக்குறுதி கொடுத

தனுஷின் 'விஐபி 2' ரிலீஸ் எப்போது?

தனுஷ் நடித்த வெற்றிப்படங்களில் ஒன்றான 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் இரண்டாம் பாகமான 'விஐபி 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து

பாலியல் வன்முறைக்கு அரபு நாட்டு பாணி தண்டனை தேவை. தன்ஷிகா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படம் உள்பட பல படங்களில் நடித்துள்ள நடிகை தன்ஷிகா நடித்த படம் 'விழித்திரு'

'பாகுபலி 2' படத்தின் பட்ஜெட் மற்றும் எதிர்பார்க்கப்படும் வசூல்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி 'பாகுபலி' படத்தை இரண்டு பாகங்களாக இயக்க முடிவு செய்தபோது இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து ரூ.200 முதல் ரூ.250 கோடி வரை பட்ஜெட் போடப்பட்டதாம்