மணிரத்னத்தின் அடுத்த படத்தில் பிரபல நடிகர்: விரிவான தகவல்

  • IndiaGlitz, [Monday,January 07 2019]

'செக்க சிவந்த வானம்' என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் மணிரத்னம், அடுத்ததாக 'பொன்னியின் செல்வன்' நாவலை மல்டி ஸ்டார்களை கொண்டு இயக்கவுள்ளார். இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகவிருக்கும் ஒரு படத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை தனசேகரன் என்பவர் இயக்கவுள்ளார்.

மணிரத்னம் இந்த படத்தை தயாரிப்பது மட்டுமின்றி வசனம் எழுதவும் உள்ளார். இந்த படத்திற்கு '96' பட புகழ் கோவிந்த வசந்தா இசையமைக்கவுள்ளார். இந்த படம் குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.