லட்சுமி ராமகிருஷ்ணனின் கடுமையான விமர்சனத்திற்கு ஜி.வி.பிரகாஷ் பதில்

  • IndiaGlitz, [Monday,November 21 2016]

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கிய 'கடவுள் இருக்குறான் குமாரு' படத்தில் இடம்பெறும் டிவி நிகழ்ச்சி காட்சியை பார்ப்பவர்களுக்கு அந்த காட்சி லட்சுமி ராமகிருஷ்ணனின் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை கிண்டல் அடித்திருப்பது புரிந்திருக்கும்
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரான லட்சுமிராமகிருஷ்ணன் தனது டுவிட்டரில் இந்த காட்சிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சினிமாவின் மகத்துவத்தை தெரிந்தவர்கள் அடுத்தவர்களை கிண்டல் செய்ய மாட்டார்கள் என்று கூறிய அவர் என்னுடைய நிகழ்ச்சியை கிண்டல் செய்தவர்கள் நான் இயக்கிய தரமான படமான 'அம்மணி'யை பாருங்கள் என்று கூறியுள்ளார். சென்னை வெள்ளத்தின்போது ஆர்.ஜே.பாலாஜி செய்த உதவியை கிண்டல் செய்தால் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதையும் யோசித்து பாருங்கள் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மேலும் ஒருசில இயக்குனர்கள் இளைஞர்களை மது, பெண்கள், அரியர் ஆகியவை மட்டுமே பேசுவதாக படமெடுக்கின்றனர். வேறு எதையும் அவர்கள் இளைஞர்களுக்கு கற்றுத்தரவில்லை என்று கூறினார்.
'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை பொய் என்று கூறுபவர்கள் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். ஒரு பொய்யான நிகழ்ச்சியை எப்படி 1000 தொடர்கள் தாண்டி வெற்றிகரமாக நடத்த முடியும். பார்க்கும் மக்கள் என்ன முட்டாள்களா?
மேலும் லட்சுமி ராமகிருஷ்ணன் 'என்னுடைய அடுத்த படத்தில் ஜி.வி.பிரகாஷூக்கு நல்ல வாய்ப்பு ஒன்று தருகிறேன். அந்தவாய்ப்பை ஏற்றுக்கொள்ள தயாரா? என்று கூற இதற்கு உடனே பதிலளித்த ஜி.வி.பிரகாஷ், 'உங்கள் கதை எனக்கேற்றவாறு நல்ல கதையாக இருந்தால் கண்டிப்பாக நடிக்கின்றேன். நானும் 'காக்கா முட்டை', 'பரதேசி', 'ஆடுகளம்' போன்ற படங்களில் பணியாற்றியவன்தான். எனவே வரும் புதன் அல்லது வியாழன் நாம் கண்டிப்பாக சந்திப்போம்' என்று கூறியுள்ளார்.

More News

தலைமறைவாக இருந்த வேந்தர் மூவீஸ் மதன் கைது

கடந்த மே மாதம் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமாய் மறைந்து போன வேந்தர் மூவீஸ் மதனை மணிப்பூரில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தகவலை சென்னை பெருநகர ஆணையர் உறுதி செய்துள்ளார்.

'24' இயக்குனரின் அடுத்த படத்தில் தனுஷ் நாயகி

தனுஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படத்தின் அடுத்தகட்ட...

ஜி.வி.பிரகாஷின் 'கடவுள் இருக்குறான் குமாரு' படத்தின் தமிழக வசூல் நிலவரம்

பிரபல இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் இளம் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த...

'நயன்தாரா அழைத்தால் திருமணத்திற்கு செல்வேன் : சிம்பு

சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து பாசிட்டிவ் விமர்சனங்களை...

ஹன்சிகாவுக்கு திருமணமா? புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகாதது ஏன்?

ஜெயம் ரவி நடிக்கும் 'போகன்' திரைப்படத்தில் நடித்து வரும் பிரபல நடிகைகளில் ஒருவராகிய ஹன்சிகா...