கேம் சேஞ்சர் ஓடிடி ரிலீஸ் எப்போது? பிரபல நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடித்த "கேம் சேஞ்சர்" திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் செய்தியை அதிகாரப்பூர்வமாக பிரபல ஓடிடி நிறுவனம் அறிவித்துள்ளது.
ராம்சரண் தேஜா இரட்டை வேடங்களில் நடித்த "கேம் சேஞ்சர்" திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கைரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா உட்பட பலர் நடித்த இந்த படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார்.
சுமார் ₹400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் இந்த படம், முதல் நாள் முதல் காட்சி முடிந்த உடனே கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் ₹200 கோடி கூட வசூல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவலை அமேசான் பிரைம் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. இந்த படம் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக இருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில், ஹிந்தி மொழி ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத "கேம் சேஞ்சர்", ஓடிடி பிளாட்ஃபார்மில் எவ்வளவு வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
raa macha, buckle up 😎 the rules are about to CHANGE 👀#GameChangerOnPrime, Feb 7 pic.twitter.com/ewegjT69yL
— prime video IN (@PrimeVideoIN) February 4, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com