அவனுக்கு மரணம் இல்ல.. அவனால தான் மரணம்.. அமிதாப் பச்சனின்  'கண்பத்' டிரைலர்

  • IndiaGlitz, [Tuesday,October 10 2023]

அமிதாப் பச்சன் மற்றும் டைகர் ஷெராஃப் முக்கிய வேடத்தில் நடித்த ‘கண்பத்’ என்ற திரைப்படத்தின் டீசர் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இரண்டு நிமிடங்களுக்கு மேல் இருக்கும் இந்த ட்ரைலரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகள் என ஒரு கமர்ஷியல் வெற்றி படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களும் உள்ளன.

மேலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பஞ்ச் வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக ’நாங்க எப்ப ரொம்ப பயப்படுறோமோ, அப்ப ரொம்ப பயங்கரமா அடிப்போம்’. ’இதுதான் கடைசி வார்னிங், என்னால உயிரை கொடுக்கவும் முடியும் ,உயிரை எடுக்கவும் முடியும்’ ’நாங்க உருவாக்கின விளையாட்டு பணக்காரங்க பறிச்சுக்கிட்டாங்க’ ’தனக்காக போராடுறவன் ஹீரோ இல்ல, தன்ன நம்புறவங்களுக்கு போராடுறவன் தான் ஹீரோ’ போன்ற பஞ்ச் வசனங்கள் வரவேற்பை பெற்றுள்ளது.

அமிதாப்பச்சன், டைகர் ஷெராப், கீர்த்திசனான் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தை விகாஸ் பாஹி என்பவர் இயக்க உள்ளார். இந்த படம் அக்டோபர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

அடுத்த வாரம் நம்மில் ஒருத்தர் கேப்டன் ஆனா, அது வேற கேம்.. மாயா ஆவேசம்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில்,  சற்றுமுன் வெளியான ப்ரோமோவில் பிக்பாஸ் ஸ்மால் ஹவுஸில் இருக்கும் போட்டியாளர்கள் ஆவேசம்

தன்பால் சேர்க்கை கதையில் பிக்பாஸ் சுருதி பெரியசாமி.. ஓடிடியில் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே'..!

பிக் பாஸ் சுருதி பெரியசாமி நடிக்கும் தனபால் சேர்க்கை கதையம்சம் கொண்ட 'வாழ்வு தொடங்கும் இடம் நீதானே' என்ற திரைப்படம் ஷார்ட்ஃபிளிக்ஸ் என்ற ஓடிடியில் தளத்தில் வெளியாகியுள்ளது

நடிகை இலியானாவின் குழந்தை.. க்யூட் புகைப்படங்கள் வைரல்..!

நடிகை இலியானா கடந்த ஆகஸ்ட் மாதம் தனக்கு குழந்தை பிறந்ததாக சமூக வலைதளத்தில் தெரிவித்த நிலையில் சற்றுமுன் அவர் தனது குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

மிஷ்கின் அடுத்த படத்தில் இணையும் இசைப்புயல்? ஹீரோ யார் தெரியுமா?

தமிழ் திரை உலகின் வித்தியாசமான இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின் தற்போது திரைப்படங்களில் நடிப்பதிலும் பிஸியாக உள்ளார் என்பதும், குறிப்பாக விஜய்யுடன் அவர் நடித்த 'லியோ'

விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்.. கூலாக பதிலளித்த லோகேஷ் கனகராஜ்..!

இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நிலையில் அதற்கு கூலாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.