close
Choose your channels

ஓவியாவின் அடுத்த படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் தகவல்

Thursday, March 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ஓவியா நடிப்பில் சமீபத்தில் வெளியான '90ml' திரைப்படம் 'ஏ' சான்றிதழை பெற்றதோடு கடும் விமர்சனத்தையும் பெற்றது. இந்த நிலையில் அவருடைய அடுத்த படத்திற்கு 'யூ' சான்றிதழ் கிடைத்துள்ளது

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகை ஓவியா நடித்து வந்த படங்களில் ஒன்று 'கணேஷா மீண்டும் சந்திப்போம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு, தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாரான நிலையில் இன்று இந்த படத்தை சென்சார் அதிகாரிகள் பார்த்தனர். இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழை சற்றுமுன் அளித்தனர். இதனையடுத்து இந்த படம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

பிரித்விராஜன், ஓவியா முக்கிய வேடத்தில் நடித்த ''கணேஷா மீண்டும் சந்திப்போம்'' படத்தை ரத்தீஷ் எரேட் என்பவர் இயக்கியுள்ளார். சிபி இசையில், விபிந்த் ராஜ் ஒளிப்பதிவில் சாய் சுரேஷ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.