ரிலீசுக்கு தயாரான கவுண்டமணி - யோகி பாபு திரைப்படம்.. முக்கிய அப்டேட்..!

  • IndiaGlitz, [Monday,February 19 2024]

கவுண்டமணி மற்றும் யோகி பாபு இணைந்து நடித்த ’ஒத்த ஓட்டு முத்தையா’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாகவும் கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி நடித்து வரும் திரைப்படம் ’ஒத்த ஓட்டு முத்தையா’. கவுண்டமணி முக்கிய வேடத்தில் நடித்து வந்த இந்த படத்தை சாய் ராஜகோபால் என்பவர் இயக்கி வந்த நிலையில் இந்த படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைத்து வந்தார்

கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றதாகவும் இதனை அடுத்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளை விரைவில் முடித்து வரும் கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

சென்டிமென்ட், அரசியல், காமெடி என அனைத்தும் கலந்த இந்த படத்தில் கவுண்டமணி ஒரு அரசியல்வாதியாக நடித்திருப்பதாகவும் அவருக்கு மூன்று சகோதரிகள் இருப்பதாகவும் அந்த மூன்று சகோதரிகளையும் மூன்று சகோதரர்களுக்கு தான் திருமணம் செய்து கொடுப்பேன் என்று பிடிவாதமாக இருக்கும் கவுண்டமணி தனது சகோதரிகளுக்கு எப்படி திருமணம் செய்து வைத்தார் என்பது தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.

கவுண்டமணியின் சகோதரிகளாக சைதன்யா, அபர்ணா மற்றும் பிந்து ஆகிய மூன்று நடிகைகள் நடித்திருக்கும் நிலையில் இவர்களுக்கு ஜோடியாக நாகேஷ் பேரன் கஜேஷ், மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி மற்றும் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக் ஆகியோர் நடித்துள்ளனர்.

More News

அட்லி பட நடிகரின் மனைவி கர்ப்பம்.. வாழ்த்து தெரிவித்த சமந்தா, ராஷ்மிகா மந்தனா..!

அட்லி படத்தில் நடித்து வரும் நடிகரின் மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ள நிலையில் அவருக்கு சமந்தா, ராஷ்மிகா மந்தனா உட்பட பல திரை உலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

3 முக்கிய கடமை: தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் எடுத்து கொண்ட உறுதிமொழி..!

மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிப்பாதை ஆகிய மூன்று முக்கிய கடமையை பின்பற்றி, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமையாற்றுவேன் என தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர்.

ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமாகி வரும் மீரா ஜாஸ்மின் நடித்த 'குயின் எலிசபெத்'

மலையாளத்தில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற "குயின் எலிசபெத்" திரைப்படம் ZEE5 தளத்தில்  தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரத்தியேகமாக கிடைக்கிறது.

தேர்வுக்கு படிக்காமல் முத்தம் கொடுத்த மாணவி.. விஜய் தேவரகொண்டா கொடுத்த வாக்குறுதி..!

மாணவி ஒருவர் தனது சக தோழிக்கு முத்தம் கொடுத்த வீடியோவை பதிவு செய்து, 'விஜய் தேவரகொண்டா இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்தால் தான் நாங்கள் தேர்வுக்கு படிப்போம் என்று பதிவு செய்ததை

முதல்முறையாக த்ரிஷாவின் உதட்டசைவுக்கு ஏற்ப பாடினேன்.. சின்மயி கூறிய ஆச்சரிய தகவல்..!

பொதுவாக பின்னணி பாடகிகள் பாடும் பாடலுக்கு ஏற்றவாறு தான் நடிகைகள் உதட்டசைவு செய்து நடிப்பார்கள் என்பது தெரிந்தது. ஆனால் பாடகி சின்மயி, த்ரிஷா பாடுவது போல் ஏற்கனவே நடித்து முடித்துவிட்ட