கமலுக்கு எதிராக கௌதமியை களத்தில் இறக்குகிறதா பாஜக..?!

மோடி, பாஜக, மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் மிகத் தீவிரமாக கருத்துகளை கூறி வரும் கமலுக்கு எதிராக கவுதமியை பாஜக களம் இறக்கியுள்ளது.

கமலுடன் ஏராளமான படங்களில் ஜோடியாக நடித்ததுடன் அவருடன் பத்து வருடங்களுக்கும் மேலாக துணைவியாக இருந்தவர் கவுதமி. சில வருடங்களுக்கு முன்னர் கருத்து வேறுபாடு காரணமாக கமலிடம் இருந்து கவுதமி பிரிந்தார். பிறகு சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராக முயற்சித்த கவுதமிக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் அரசியல் பக்கம் திரும்பினார்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் கௌதமி. பின்னர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக சொன்ன போது அது சர்ச்சையானது.   கடந்த மாதம் சென்னையில் பாஜக சார்பில் முப்பெரும விழா நடைபெற்றது. இந்த விழாவில் கவுதமி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். உள்ளாட்சித் தேர்தலிலும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக சொல்லப்பட்டது.

கமலுக்கு எதிராக இவர் சரியானவராக இருப்பர் என பாஜக தலைமை நினைப்பதாக அந்த கட்சியை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.  விரைவில் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் பதவி கௌதமிக்கு கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.   
  
 

More News

கோலம் போட்டு கொள்கை பரப்பும் தமிழகம்..! #NoCAA

தங்களது வீட்டில் “NO CAA, NO NRC” என்ற வாசகங்கள் கொண்ட கோலங்களைப் போட்டு திமுகவினர் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

அரைநிர்வாண குளியல் வீடியோ: 16 வயது சிறுமியை மிரட்டிய சென்னை வாலிபர் கைது!

16 வயது சிறுமியின் அரைநிர்வாண குளியல் வீடியோவை வைத்து மிரட்டிய சென்னையை சேர்ந்த பட்டதாரி வாலிபர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டார் 

வளைவில் திரும்பும்போது காரில் இருந்து கீழே விழுந்த குழந்தை: வைரலாகும் வீடியோ

வேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று வளைவில் திரும்பும் போது திடீரென காரில் இருந்த குழந்தை ஒன்று கீழே விழுந்த சிசிடிவி வீடியோ காட்சியில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

ஓடும் ரயிலில் சாகசம் செய்த 20 வயது வாலிபர் பரிதாப பலி!

https://tamil.news18.com/news/national/train-stunts-kill-20-year-old-ambulance-driver-from-kalyan-san-239125.html

தளபதியின் திரைத்துறை தம்பி: எஸ்.ஜே.சூர்யா குறிப்பிட்டது யாரை?

நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா நடித்த ;மான்ஸ்டர்; திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் தற்போது 'இரவைக்காலம்