close
Choose your channels

மஞ்சிமா மீதான காதலை உறுதி செய்த கெளதம் கார்த்திக்: செம ரொமான்ஸ் புகைப்படங்கள்!

Monday, October 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் இளைய தலைமுறை நடிகரான கௌதம் கார்த்திக் நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து வருவதாக கூறப்பட்டது. இருவரும் விரைவில் திருமண தேதியை அறிவிப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஒருவருக்கொருவர் தங்கள் காதலை மறுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மஞ்சிமா மோகன் பேட்டி அளித்த போது என் வாழ்க்கையில் நடக்கும் முக்கிய சம்பவங்களை யாரிடமும் நான் மறைப்பதில்லை என்றும் ஒவ்வொரு நிகழ்வையும் நான் அனைவரிடமும் பகிர்ந்து வருகிறேன் என்றும் திருமணம் போன்ற பெரிய நிகழ்வை நான் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் என்னுடைய திருமணம் மற்றும் காதலை கண்டிப்பாக வெளியிடுவேன் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். அதேபோல் கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகனை காதலிப்பது குறித்து எந்தவித பதிலும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் கெளதம் கார்த்திக் தனது சமூக வலைத்தளத்தில் மஞ்சிமா மோகனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். செம ரொமான்ஸ் ஆக இருக்கும் இந்த புகைப்படங்கள் இருவரும் காதலிப்பதை உறுதி செய்து உள்ளதாக கருதப்படுகிறது.

எனவே கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ரசிகர்கள் இந்த காதல் ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சூர்யா-ஜோதிகா உள்பட தமிழ் திரையுலகில் பல நட்சத்திர ஜோடிகள் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் அந்த பட்டியலில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் விரைவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.