close
Choose your channels

Mr.லோக்கல் இடத்தை பிடித்த 'தேவராட்டம்'

Friday, April 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கத்தில், ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகிய 'Mr.லோக்கல்' திரைப்படம் மே 17ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 'தேவராட்டம்' திரைப்படம் மே 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன் Mr.லோக்கல் திரைப்படம் மே 1ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு வெளிவந்து தற்போது மே 17ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதால் Mr.லோக்கல் விட்டுச்சென்ற தேதியை 'தேவராட்டம்' திரைப்படம் பிடித்துள்ளது. மேலும் Mr.லோக்கல் மற்றும் 'தேவராட்டம்' ஆகிய இரண்டு திரைப்படங்களையும் ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தான் தயாரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், சூரி, ராஜ்கிரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை எம்.முத்தையா இயக்கியுள்ளார். நிவாஸ் கே.பிரசன்னா இசையில் சக்தி சரவணன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.