வெயில், மழை, புயலுடன் போராட்டம்: சிம்பு குறித்து கவுதம் கார்த்திக்

  • IndiaGlitz, [Thursday,June 27 2019]

சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறித்து ஏற்கனவே பார்த்தோம். சமீபத்தில் சிம்புவிடம் கவுதம் கார்த்திக் ஆட்டோகிராப் பெற்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதும் தெரிந்ததே

இந்த நிலையில் சற்றுமுன் சிம்புவுடன் தான் இருக்கும் புகைப்படம் ஒன்றை கவுதம்கார்த்திக் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து கடுமையான காற்று, சுட்டெரிக்கும் வெயில், கொட்டும் கனமழை, எல்லாவற்றையும் நாங்கள் இன்று சந்தித்து வருகிறோம். ஆனாலும் நாங்கள் எங்கள் பணியில் முன்னேறி கொண்டே இருக்கின்றோம் என்று பதிவு செய்துள்ளார்.

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான 'முஃப்தி' என்ற படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தை நார்தன் இயக்கி வருகிறார். மதன் கார்க்கி இந்த படத்திற்கு வசனம் மற்றும் பாடல்களை எழுதுகிறார். சிம்புவின் 45வது படமாக இந்த படம் உருவாகி வருகிறது

More News

சென்னையில் இருந்து கூகுளுக்கு மீண்டும் ஒரு சுந்தர் பிச்சை!

தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை, உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனத்திற்கு கடந்த 2015ஆம் ஆண்டு சி.இ.ஓவாக பொறுப்பேற்றார்.

இவ்வளவு நாள் பிழைப்ப பார்த்துகிட்டு நல்லாதானே இருந்திங்க: வெண்ணிலா கபடிக்குழு 2 டீசர்

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த 'வெண்ணிலா கபடிக்குழு' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து பல கபடி திரைப்படங்கள் தமிழில் வெளிவந்தன.

லூஸ்லியா இதயங்களை வென்றுவிட்டார்: பிரபல நடிகரின் டுவீட்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று போட்டியாளர்களின் அறிமுகங்களுடன் தொடங்கிய நிலையில் முதல் நாளே இலங்கை தமிழ்ப்பெண்ணான லூஸ்லியாவுக்கு

பிரிட்ஜ் வெடித்து டிவி செய்தியாளர் குடும்பத்துடன் பலி: சென்னை அருகே சோகம்

சென்னை அருகே டிவி செய்தியாளர் வீட்டில் பிரிட்ஜ் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் அவருடைய குடும்பமே பலியான சோக நிகழ்ச்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

பிக்பாஸ் வீட்டில் கவின் கேர்ள்பிரண்ட் யார்?

இந்த முறை பிக்பாஸ் வீட்டின் பிளேபாய் கவின் தான் என்பது முதல் நாளே தெரிந்துவிட்டது. தர்ஷன், சாண்டி, முகன்ராவ், என இளைஞர் கூட்டம் அதிகம் இருந்தாலும்,