close
Choose your channels

ஒரே தயாரிப்பாளருடன் மூன்றாவது முறையாக இணையும் கவுதம் கார்த்திக்

Thursday, January 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நவரச நாயகன் கார்த்திக் மகனும் இளையதலைமுறை நடிகருமான கவுதம் கார்த்திக் தற்போது கோலிவுட் திரையுலகில் வெற்றி நடை போட்டு வரும் நிலையில் ஒரே தயாரிப்பாளரின் தயாரிப்பில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்

கோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்டுடியோக்ரீன் நிறுவனத்தின் ஞானவேல்ராஜா தயாரித்த 'ஹர ஹர மகாதேவகி' என்ற வெற்றி படத்தில் நடித்த கவுதம் கார்த்திக், மீண்டும் அவருடைய தயாரிப்பில் உருவாகி வரும் 'இருட்டு அறையில் முரட்டுக்குத்து என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடியுந்தருவாயில் உள்ளது.

இந்த நிலையில் தற்போது ஞானவேல்ராஜா தயாரிக்கும் மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ' தேவர் ஆட்டம்' என்ற தலைப்பில் உருவாகவுள்ள இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்குகிறார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.