'நாங்க சட்டத்திற்கு கட்டுப்பட மாட்டோம்.. பேஸ்மெண்ட் டீம்': துருவ நட்சத்திரம் டிரைலர்..!

  • IndiaGlitz, [Tuesday,October 24 2023]

சியான் விக்ரம் நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’துருவ நட்சத்திரம்’ என்ற திரைப்படம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிட்டத்தட்ட 2 நிமிடங்களுக்கு மேலாக இருக்கும் இந்த ட்ரைலரில் மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு பேஸ்மெண்ட் என்ற டீம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த டீமில் உள்ளவர்களுக்கு சட்ட திட்டம் எதுவும் கிடையாது என்றும் யாருக்கும் கட்டுப்பட மாட்டோம் என்றும் தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக இந்த டீம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் உயர் அதிகாரி ஒருவர் பார்த்திபனிடம் கூறுகிறார். கிட்டத்தட்ட ‘விக்ரம்’ படத்தில் வரும் பகத் பாசில் டீம் தான் இந்த டீம் என தெரிகிறது.

இந்த டீமில் 10 பேர் இருக்கிறார்கள், ஆனால் இன்னும் ஒருவர் வேணும் அவர் ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்று அந்த அதிகாரி சொல்ல அவர் தான் சியான் விக்ரம் என காண்பிக்கப்படுகிறது

உன் டீமுக்கு பெயர் இருக்கா? என்று விநாயகன் விக்ரமிடம் கேலியாக கேட்கும்போது ’இருக்குது ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ என்று பதிலுக்கு நக்கலுடன் விக்ரம் பதிலளிக்கும் காட்சியும் அதற்கு விநாயகனின் சிரிப்பும் அசத்தலாக உள்ளது

’சச்சின் மாதிரி, தோனி மாதிரி ஆகணும்னா கிரவுண்டுக்கு வரணும்’ என்ற கௌதம் மேனன் வசனமும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. மொத்தத்தில் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் டிரைலரே அட்டகாசமாக இருக்கும் நிலையில் நிச்சயம் சியான் விக்ரமுக்கு இந்த படம் ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிரெஞ்ச் மொழி திரைப்படத்தில் ராதிகா.. முதல் நாள் படப்பிடிப்பின் புகைப்படங்கள்..!

தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் நடித்த நடிகை ராதிகா தற்போது முதல் முறையாக பிரெஞ்சு மொழி திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறியதோடு அது குறித்த புகைப்படங்களையும் தனது சமூக

என்னுடைய பிறந்த நாளில் ஐந்து ஸ்பெஷல்: லைலாவின் க்யூட் வீடியோ வைரல்..!

நடிகை லைலா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

சூப்பர் ஸ்டார், ஆனால் எளிமை.. மும்பையில் ரஜினியை சந்தித்த பிரபல கிரிக்கெட் வீரர்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'தலைவர் 170' படத்தின் படப்பிடிப்பிற்காக மும்பை சென்ற நிலையில் மும்பை விமான நிலையத்தில் அவரை சந்தித்த பிரபல கிரிக்கெட் வீரர் 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எளிமை குறித்து

கவுண்டமணியின் 'ஒத்த ஓட்டு முத்தையா'படத்தின் கதை இதுவா?

 நகைச்சுவை நடிகர் கவுண்டமணி தற்போது 'ஒத்த ஓட்டு முத்தையா' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் கதை என்ன என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது.

திடீரென காயமடைந்த லோகேஷ் கனகராஜ்.. கேரளாவில் என்ன நடந்தது?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கேரளாவில் 'லியோ' படத்தின் ப்ரோமோஷன் பணிக்காக சென்றிருந்த நிலையில் அங்கு அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.