close
Choose your channels

'சின்ன வயசிலேயே நான் பெரிய பையன்': வைரலாகும் பிரபல இயக்குனரின் சிறுவயது புகைப்படம்!

Saturday, August 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’சின்ன வயசுலயே நான் பெரிய பையன்’ என்ற கேப்ஷனுடன் பிரபல இயக்குனர் ஒருவரின் சிறுவயது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

கடந்த 2001 ஆம் ஆண்டு ’மின்னலே’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குநர் கௌதம்மேனன். அதன் பின்னர் ’காக்க காக்க’ ’வேட்டையாடு விளையாடு’ ’வாரணம் ஆயிரம்’ ’விண்ணைத்தாண்டி வருவாயோ’ ’என்னை அறிந்தால்’ உள்பட பல திரைப்படங்களை அவர் இயக்கி உள்ளார். தற்போது அவன் ’ஜோஸ்வா இமைபோல் காக்க’ ’துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்களை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் அவரது சிறுவயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில் தந்தை தாயுடன் தனது இரண்டு சகோதரிகளுடன் கௌதம் மேனன் உட்கார்ந்திருக்கிறார். ’சின்ன வயசிலேயே நான் பெரிய பையன்’ என்ற கேப்ஷன் தங்களது குடும்பத்தில் தான் மூத்த பிள்ளை என்பதை குறிப்பிடுவதாக தெரிகிறது

கௌதம் மேனனின் இந்த சிறுவயது புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படத்தில் உள்ள கௌதம் மேனனின் தந்தையை போலவே ’வாரணம் ஆயிரம்’ படத்தில் தந்தை சூர்யாவின் கெட்டப் இருப்பதாகவும் ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.