close
Choose your channels

ஸ்டைலிஷ் இயக்குனருடன் இணைந்த விஷால்!

Tuesday, February 12, 2019 • தமிழ் Comments

நடிகரும், நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கதலைவருமான விஷால் தற்போது 'அயோக்யா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் விஷாலின் அடுத்த படத்தை ஸ்டைலிஷ் இயக்குனர் கவுதம்மேனன் இயக்கவுள்ளார். இந்த படம் தயாரிப்பாளர் சங்கத்தின் நிதிக்காக உருவாக்கப்படுவதாகவும், இந்த படத்தின் லாபம் முழுவதும் நலிந்த தயாரிப்பாளர்களின் நலனுக்காக செலவு செய்யப்படும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.
 

Get Breaking News Alerts From IndiaGlitz