close
Choose your channels

துருவ் நடிக்கும் 'ஆதித்ய வர்மா'வில் இணைந்த பிரபல இயக்குனர்

Thursday, March 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீயான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கி வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் தற்போது கவுதம் மேனன் விக்ரம் மகன் துருவ் நடித்து வரும் 'ஆதித்ய வர்மா' படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் அவர் துருவ் தந்தை கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக பாலா இயக்கிய 'வர்மா' திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்த தயாரிப்பு நிறுவனமான E4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது அதே படத்தை மீண்டும் 'ஆதித்ய வர்மா' என்ற பெயரில் தயாரித்து வருகிறது. அர்ஜூன் ரெட்டி தெலுங்கு படத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்த கிரிசய்யா இந்த படத்தை இயக்கி வருகிறார்.

துருவ் விக்ரம் ஜோடியாக பனிதா சந்து நடித்து வரும் இந்த படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் ப்ரியா ஆனந்த் நடிக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.