வடிவேலுவை ஹீரோவாக வைத்து ஒரு முழுநீள காமெடி படம்: கெளதம் மேனன் திட்டம்

வடிவேலு நடிப்பில் ஒரு முழுநீள காமெடி படம் இயக்க வேண்டும் என்பது தனது நீண்ட கால திட்டம் என கவுதம் மேனன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

சிம்பு நடிப்பில் உருவாகிவரும்’ வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள கெளதம் மேனன், விக்ரம் நடித்துள்ள ’துருவ நட்சத்திரம்’ வருண் நடித்துள்ள ’ஜோஸ்வா இமைபோல் காக்க’ ஆகிய படங்களையும் இயக்கி முடித்துள்ளார். இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்ததாக வடிவேலுவை வைத்து ஒரு முழுநீள காமெடி படம் இயக்க வேண்டும் என்ற திட்டம் தன்னிடம் உள்ளதாகவும், அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் நடைபெற்று வருவதாகவும், ஸ்கிரிப்ட் பணிகள் முடிந்ததும் வடிவேலுவை தொடர்பு கொள்ள இருப்பதாகவும் கெளதம் மேனன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கெளதம் மேனன் இயக்கத்தில் இதுவரை முழுக்க முழுநீள ரொமான்ஸ் படம், முழுநீள ஆக்ஷன் படம், முழு நீள த்ரில் படங்களை பார்த்துள்ளோம். முதல்முறையாக அவரிடமிருந்து ஒரு முழுநீள காமெடி படம் உருவானால் அது எப்படி இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நயன் - விக்னேஷ் சிவனின் ரொமான்ஸ் காதலர் தினம்: புகைப்படம் & வீடியோ!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வரும் நிலையில் இந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள்

மாதவனின் 'ராக்கெட்டரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான மாதவன் நடித்து இயக்கிய 'ராக்கெட்டரி'  திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் ஐந்து ஆண்டுகள் கழித்து தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி

பிக்பாஸ் அல்டிமேட்: இந்த வார நாமினேஷனில் சிக்கிய 8 போட்டியாளர்கள் யார் யார்?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரம் சுரேஷ் சக்கரவர்த்தியும், இரண்டாவது வாரம் சுஜாவும் எலிமினேஷன் செய்யப்பட்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

10 வருட காதல் பந்தம்: காஜல் அகர்வாலின் 'காதலர் தின' புகைப்படம்!

இது 10 வருட காதல் பந்தம் என தனது கணவர் கௌதம் உடன் இருக்கும் புகைப்படத்தை காதலர் தின புகைப்படமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை காஜல் அகர்வால் பதிவு செய்துள்ள

அமீர்-வெற்றிமாறன் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் இயக்குனர் அமீர் ஆகிய இருவரும் ஒரே படத்தில் இணைய உள்ளதாக வெளியான அறிவிப்பு குறித்து ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில்