'வெந்து தணிந்தது காடு' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த ஐடியா: கவுதம் மேனனின் ஆச்சரிய தகவல்

சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில், வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், இசைப்புயல் ஏஆர் ரகுமானின் இசையில் உருவான திரைப்படம் ’வெந்து தணிந்தது காடு’. இந்த படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் முதல் நாளே இந்த படம் ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று சென்னையில் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் சக்சஸ் மீட் கொண்டாடப்பட்டது. இதில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குனர் கௌதம் மேனன், நடிகர் சிம்பு உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கௌதம் மேனன் பேசியபோது ஒரு முக்கிய விஷயத்தை கூறினார். இந்த படத்தில் இடம்பெற்ற ’மல்லிகை பூ’ என்ற பாடல் முதலில் படத்தில் இல்லை என்றும் நானும் ஜெயமோகனும் தயாரித்த ஸ்கிரிப்டில் இந்த பாடல் கிடையாது என்றும் அவர் கூறினார்.

ஆனால் இந்த படத்தை பார்த்த இசைப்புயல் ஏஆர் ரகுமான் இந்த இடத்தில் ஒரு பாடல் வைத்தால் நன்றாக இருக்கும் என ஐடியா கொடுக்க, அவருடைய ஐடியாவை ஏற்றுக் கொண்டபின் தாமரை எழுதிய ’மல்லிகை பூ’ பாடலை இந்த இடத்தில் சேர்க்கப்பட்டதாகவும், இந்த பாடல் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக உள்ளது என்று கவுதம் மேனன் கூறியுள்ளார். எனவே இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பு முழுவதும் ஏஆர் ரகுமான் அவர்களையே சேரும் என்று பெருமையுடன் அவர் கூறியுள்ளார்.
 

More News

அடையாளம் தெரியாமல் மாறிப்போன குஷ்புவின் மகள்; ஹீரோயினிக்கு தயாரா?

நடிகை குஷ்பு தனது மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், குஷ்புவின் மகள் ஆளே அடையாளம் தெரியாமல் மாறி விட்டதாகவும்

'கேப்டன் மில்லர்' படத்தின் அசத்தலான கெட்டப்: தனுஷ் வெளியிட்ட புகைப்படம் வைரல்!

 தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் நடித்து முடித்துள்ள 'நானே வருவேன்' மற்றும் 'வாத்தி' ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன.

ராமராஜனின் 'சாமானியன்' ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்ட விஜய்சேதுபதி என்ன சொன்னார் தெரியுமா?

 மக்கள் நாயகன் ராமராஜன் பத்து ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தமிழ் திரையுலகில் ரீஎன்ட்ரி ஆகி உள்ளார் என்றும் அவர் நடிக்கயிருக்கும் திரைப்படத்திற்கு 'சாமானியன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக

பிறந்த நாள் கேக்கை பார்த்ததும் அலறியடித்து ஓடிய 'குக் வித் கோமாளி' ஸ்ருதிகா: வைரல் வீடியோ

'குக் வித் கோமாளி' சீசன் 3 டைட்டில் வின்னர் ஸ்ருதிகா பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் அவர் பிறந்தநாள் கேக்கை கட் செய்ய வரும்போது அலறியடித்து ஓடிய சம்பவம் பெரும்

பிரதமர் பதவி கொடுத்தால் இந்தி பேச தயார்: பிரபல நகைச்சுவை நடிகர்!

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஒருவர் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது பிரதமர் பதவி கொடுத்தால் தான் இந்தி பேசத் தயார் என்று கூறியுள்ளார்.