close
Choose your channels

நயன்தாரா திருமண வீடியோவை நான் இயக்கவில்லை: கெளதம் மேனன்

Friday, September 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் இந்த வீடியோவை பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த இயக்குனர் கெளதம் மேனன் நயன்தாரா திருமணம் வீடியோவை தான் இயக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரம் அருகே உள்ள தனியார் ரிசார்ட் இவர்களது திருமணம் பிரமாண்டமாக நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சியை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு நயன்தாரா விற்பனை செய்து விட்டதாகவும் இந்த திருமண வீடியோவை கௌதம் மேனன்தான் இயக்கினார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கௌதம் மேனன் நயன்தாரா திருமண வீடியோவை தான் இயக்கவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் 'Nayanthara Beyond The Fairytale' என்ற டைட்டிலில் நயன்தாரா ஆவணப்படத்தை தான் இயக்கியுள்ளதாகவும், இந்த ஆவணப்படத்தில் நயன்தாராவின் சிறுவயது புகைப்படங்கள், திருமண புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் சில விஷயங்கள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.