மீண்டும் 'துருவ நட்சத்திரம்' படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சி.. இத்தனை மாதங்கள் ஆகுமா?

  • IndiaGlitz, [Wednesday,January 17 2024]

சியான் விக்ரம் நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டது என்பதை பார்த்தோம்.

குறிப்பாக ’துருவ நட்சத்திரம்’ திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு புரமோஷன் பணிகளும் நடந்த நிலையில் கடைசி நேரத்தில் திடீரென ஒரு சில காரணங்களால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை என கௌதம் மேனன் வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார்

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்யப்பட்டு வருவதாகவும் மீண்டும் இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது வந்துள்ள தகவலின்படி ’துருவ நட்சத்திரம்’ திரைப்படம் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விக்ரம் நடித்த ’தங்கலான்; திரைப்படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ’தங்கலான்; ரிலீசுக்கு பின்னர் ’துருவ நட்சத்திரம்’ படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விஜய் டிவி ரக்சனுடன் கீர்த்தி சுரேஷ் நடித்த படம்.. முக்கிய அப்டேட்..!

 விஜய் டிவி ரக்சன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது நடந்து வந்ததாக தகவல் வெளியானது.

அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தின் முதல் பிசினஸ்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அஜித் நடித்த 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் முதல் பிசினஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ZEE5 தளத்தில் வெளியாகும் நேரடி திரைப்படம்.. ஜனவரி 12 முதல் இலவசமாக ஸ்ட்ரீம்..!

ZEE5 தளம்  அதன் அஜய் கர்துர்வார் நடிப்பில் 'அஜய் காடு'  என்ற தெலுங்கு படத்தினை நேரடி  டிஜிட்டல் பிரீமியராக வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்புவின் அடுத்த படம் 'பாகுபலி' அளவுக்கு இருக்கும்.. சொன்னது யார் தெரியுமா?

நடிகர் சிம்புவின் அடுத்த படம் பாகுபலி அளவுக்கு பிரமாண்டமாக இருக்கும் என்றும் இந்தியாவில் ஐந்து முக்கிய இயக்குனர்களை தேர்வு செய்ய வந்தால் அதில்  இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இன்னும்

சாய் பல்லவி வீட்டில் நடக்கும் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

நடிகை சாய் பல்லவியின் சகோதரி தனது வருங்கால கணவரை இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்துள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.