சிறப்பு தோற்றத்தில் கௌதம் மேனன் நடிக்கும் அடுத்த படம்

  • IndiaGlitz, [Wednesday,November 22 2017]

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் தான் இயக்கும் அனைத்து படங்களிலும் ஓரிரு காட்சிகளில் தோன்றுவது வழக்கமே. இந்த நிலையில் இயக்குனர் விஜய்மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் 'கோலி சோடா 2' படத்தில் கெளதம் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் 'தீவிரம்' என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் அதுவும் காவல்துறை அதிகாரி வேடத்தில் கௌதம் மேனன் நடித்துள்ளார். இதுகுறித்து 'தீவிரம்' இயக்குனர் மைக்கேல் முத்து கூறுகையில், 'கௌதம் மேனன் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரியாக இந்த படத்தில் நடித்துள்ளார். அவருடைய காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்துவிட்டது. இந்த கேரக்டருக்கு கெளதம் மேனன் மிகப்பொருத்தமாக இருந்தார். குறிப்பாக அவருடைய தாடி மற்றும் மீசை இந்த வேடத்திற்கு கம்பீரமாக இருந்தது' என்று கூறியுள்ளார்

மேலும் கெளதம் மேனன் படப்பிடிப்பின்போது தனது கேரக்டரை மெருகேற்ற ஒருசில டிப்ஸ்கள் கொடுத்ததாகவும், அனைத்து ஷாட்களையும் ஒரே ஷாட்டில் முடித்து கொடுத்து அனைவரையும் அசத்தியதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் நானும் இந்த படத்தில் கெளதம் மேனன் கேரக்டருக்கு உதவியாளராக நடித்துள்ளதாக இயக்குனர் மைக்கேல் முத்து கூறியுள்ளார்.

இந்த படம் இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு தீவிரவாதத்தை நோக்கி நகர்வதையும், மனிதவெடிகுண்டாக மாறும் அவலத்தையும் தோலுரித்து காட்டும் படம் என்று கூறப்படுகிறது.