close
Choose your channels

அஜித்துடன் மீண்டும் இணைகிறாரா கெளதம் மேனன்? அவரே அளித்த தகவல்!

Friday, September 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கௌதம் மேனன் மீண்டும் அஜித்துடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’அஜித் 62’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் கௌதம் மேனன் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள் கசிந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் இது குறித்து கௌதம் மேனன் விளக்கம் அளித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் தனது நெருங்கிய நண்பர் என்றும் இதுவரை அந்த படத்தில் வில்லனாக நடிப்பது குறித்து எதையும் அவர் கூறவில்லை என்றும் ஆனால் இனிமேல் அவர் அந்த படத்தில் வில்லனாக நடிக்க கேட்டு கொண்டால் அந்த கேரக்டர் எனக்கு பொருத்தமாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தை இயக்கி முடித்து ரிலீஸ் செய்த கௌதம் மேனன், அடுத்ததாக விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ மற்றும் ‘ஜோஷ்வா இமைபோல் காக்க’ ஆகிய திரைப்படங்களை இயக்கி வருகிறார் என்பதும் இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து ரிலீஸாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது .
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.