அஜித்துடன் மீண்டும் இணைகிறாரா கெளதம் மேனன்? அவரே அளித்த தகவல்!

அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கௌதம் மேனன் மீண்டும் அஜித்துடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’அஜித் 62’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் கௌதம் மேனன் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள் கசிந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் இது குறித்து கௌதம் மேனன் விளக்கம் அளித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் தனது நெருங்கிய நண்பர் என்றும் இதுவரை அந்த படத்தில் வில்லனாக நடிப்பது குறித்து எதையும் அவர் கூறவில்லை என்றும் ஆனால் இனிமேல் அவர் அந்த படத்தில் வில்லனாக நடிக்க கேட்டு கொண்டால் அந்த கேரக்டர் எனக்கு பொருத்தமாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தை இயக்கி முடித்து ரிலீஸ் செய்த கௌதம் மேனன், அடுத்ததாக விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ மற்றும் ‘ஜோஷ்வா இமைபோல் காக்க’ ஆகிய திரைப்படங்களை இயக்கி வருகிறார் என்பதும் இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து ரிலீஸாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது .
 

More News

நயன்தாரா திருமண வீடியோவை நான் இயக்கவில்லை: கெளதம் மேனன்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் இந்த வீடியோவை பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியதாக செய்திகள் வெளியானது.

அடுத்தடுத்த 2 மாதங்களில் சமந்தாவின் 2 படங்கள் ரிலீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு

சமந்தா, விஜய் தேவரகொண்டா உடன் நடித்து வரும் 'குஷி' என்ற திரைப்படம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சமந்தா நடித்து வரும்

சின்ன வயசு நித்யா மேனனா இவர்? அப்பவே எவ்வளவு க்யூட்டா இருக்கார் பாருங்க!

தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் பிரமாதமாக நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்ற நடிகை நித்யாமேனனின் சிறுவயது வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதையடுத்து அப்பவே எவ்வளவு க்யூட்டா

முழுக்க முழுக்க மெட்டுக்கு எழுதப்பட்ட பாடல்: 'மல்லீப்பூ' பாடல் குறித்து தாமரை

சமீபத்தில் வெளியான சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பாக இந்த படத்தில் இடம் பெற்ற 'மல்லீப்பூ' என்ற பாடல் செம ஹிட் என்பது தெரிந்ததே

மிருணாள் தாக்கூரை அடுத்து இளவரசி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை!

சமீபத்தில் வெளியான 'சீதாராமம்' என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகியோரின் நடிப்பு ரசிகர்களால்