பிரதமருக்கு கவுதமி கடிதம் எழுதியது உண்மையா? அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Saturday,February 04 2017]

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல சந்தேகங்களை எழுப்பிய நடிகை கவுதமி, இதுகுறித்து பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். மேலும் கவுதமி தனது கடிதத்திற்கு எந்தவித பதிலும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து வரவில்லை என்று தெரிவித்திருந்தையும் சற்று முன் பார்த்தோம்

இந்நிலையில் நடிகை கவுதமி பிரதமருக்கு கடிதம் எழுதினாரா? என்று சந்தேகம் எழும் அளவுக்கு தற்போது செய்தி வெளிவந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த தீபக் என்பவர் பிரதமர் அலுவலகத்துக்கு சமீபத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் நடிகை கவுதமி எழுதிய கடிதத்தின் நகல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி விண்ணப்பம் செய்திருந்த இவருக்கு கடந்த மாதம் பிரதமர் அலுவலகத்தில் இருந்து பதில் வந்துள்ளது. அதில் நடிகை கவுதமியிடம் இருந்து பிரதமர் அலுவலகத்திற்கு எந்த கடிதமும் வரவில்லை என்று பிரதமர் அலுவலகம் அளித்துள்ளது. இதனால் நடிகை கவுதமி உண்மையில் கடிதம் எழுதினாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது குறித்து தீபக் செய்தியாளர்களிடம் கூறியபோது, "பிரபலமானவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பிரதமருக்கு கடிதம் எழுதுகிறேன் என்று சொல்கிறார்களே உண்மையாக எழுதுகிறார்களா? அல்லது விளம்பரத்துக்காக எழுதுகிறார்களா ? என்று தெரிந்து கொள்ளவே கேட்டிருந்தேன். ஆனால் பிரதமர் அலுவலகமோ அப்படி ஒரு கடிதம் வரவில்லை என்று கூறியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டேன். மேலும் கவுதமியும் விளம்பரத்துக்காகத்தான் கடிதம் எழுதியுள்ளாரோ? என்று தோன்றுகிறது. பிரதமர் அலுவலகம் தவறான தகவல் கொடுக்க வாய்ப்பில்லை. கவுதமிதான் இதற்கு விளக்கம் தரவேண்டும்" என்று கூறினார்.

இப்படி ஒரு சர்ச்சை எழுந்துள்ள நிலையில், கவுதமி இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக இன்று ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் பிரதமருக்குத் தான் எழுதிய கடிதம் பிரதமர் அலுவலகத்தை அடையவையே இல்லை என்று பதில் வந்திருப்பதும் பிரதமர் பார்வைக்கே அது போகவில்லை என்பதும் அதிர்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ளார். மேலும் பிரதமருக்கும் மத்திய அரசுக்கும் பல்வேறு கேள்விகளை அந்த அறிக்கையில் எழுப்பியுள்ளார்.

ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்த அறிக்கையை இந்த இணைப்பில் படிக்கலாம்"How is a citizen's query any less relevant?"- Gauthami asks PM Modi

More News

முதல்வர் பதவியை நோக்கி சசிகலா.. விட்டு கொடுக்கின்றாரா ஓபிஎஸ்?

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்று சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

ரூ.100 நோட்டுக்கும் ஆபத்தா? ரிசர்வ் வங்கி விளக்கம்

ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு அதற்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிரபுதேவாவுடன் மீண்டும் இணையும் ஆர்ஜே பாலாஜி

இயக்குனர் விஜய் இயக்கிய 'தேவி' படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்த நடித்த ஆர்ஜே பாலாஜி, மீண்டும் ஒரு படத்தில் அவருடன் இணைகிறார். அந்த படம் தான் 'யங் மங் சங்'...

கமல் பட டைட்டில் வைத்த சிபிராஜூக்கு கமல் பாராட்டு

சத்யராஜ் மகனும் நடிகருமான சிபிராஜ் தற்போது 'சைத்தான்' இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் தற்போது வெளியாகியுள்ளது...

நான் முதலில் மனிதன். அப்புறம்தான் 'இந்தியன்'. கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக சமூக கருத்துக்களை அதிகம் தனது சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார். ஜல்லிக்கட்டு விஷயத்தில் அவர் தெரிவித்த நியாயமான கருத்துக்கள், காவல்துறையின் வன்முறைக்கு அவர் தெரிவித்த கண்டனங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...