திருமாவளவனுக்கு ஆறுதல் கூறிய காயத்ரி ரகுராம்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு நடிகை காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் சகோதரி பானுமதி என்பவர் நேற்று கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பானுமதி அவர்கள் திடீரென உயிரிழந்தது அவரது சகோதரர் திருமாவளவன் அவர்களை பெரும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இந்த நிலையில் திருமாவளவன் அவர்களுக்கு அரசியல் தலைவர்கள், பா.ரஞ்சித் உள்பட பல திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் திருமாவளவன் அவர்களின் சகோதரி இழப்பிற்கு நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான காயத்ரி ரகுராம், தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து, அவருக்கு ஆறுதலும் கூறியுள்ளார். திருமாவளவன் அவர்களின் சகோதரி பானுமதி அவர்கள் கொரோனாவால் மரணம் அடைந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன் என்றும், அவரது குடும்பத்திற்கு தனது இரங்கல் என்றும் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் அவர்களுடன் கொள்கை அளவில் வேறுபட்டிருந்தாலும், அரசியல் நாகரீகம் கருதி காயத்ரி ரகுராம் இரங்கல் தெரிவித்துள்ளதை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்,

More News

போதும் மீரா, இதோட நிறுத்திக்கோங்க: தமிழ் நடிகை எச்சரிக்கை

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான மீராமிதுன் கடந்த சில வாரங்களாகவே முக்கிய நட்சத்திரங்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக விஜய் மற்றும் சூர்யா குறித்து

ஹாலிவுட்டின் கவர்ச்சிக் கன்னி மர்லின் மன்றோ!!! மர்ம நிறைந்த இறுதி நாட்கள்!!!

இருபதாம் நூற்றாண்டின் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் மர்லின் மன்றோ

'சிகப்பு ரோஜாக்கள் 2' படம் குறித்து பாரதிராஜா மகன் விளக்கம்!

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில், இசைஞானி இளையராஜா இசையில் கடந்த கடந்த 1978ஆம் ஆண்டு உருவான திரைப்படம் 'சிகப்பு ரோஜாக்கள்'

ஐடி வேலை பறிபோனதால் ஆடு திருடிய சென்னை இளம்பெண்: ஊரடங்கால் ஏற்பட்ட கொடுமை

ஊரடங்கு காரணமாக நாட்டில் கோடிக்கணக்கானோர் வேலையின்றி வருமானம் இன்றி இருப்பதால் பசியின் கொடுமை காரணமாக சட்டவிரோத செயல்களை செய்ய பலர் துணிந்து

ஜெய் ஸ்ரீராம்! குஷ்புவின் ராமர்கோவில் டுவீட்டால் பரபரப்பு

நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கடந்த சில நாட்களாக பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.