சீனுராமசாமி-ஜிவி பிரகாஷ் படத்தின் நாயகி அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சீனுராமசாமி, ‘தென்மேற்கு பருவக்காற்று’, ’நீர்பறவை’ ’இடம் பொருள் ஏவல்’ ’தர்மதுரை’ ’கண்ணே கலைமானே’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் என்பதும் அவர் இயக்கிய விஜய்சேதுபதியின் ‘மாமனிதன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சீனுராமசாமி இயக்கும் அடுத்த படத்தில் நாயகனாக ஜிவி பிரகாஷ் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் கதை மதுரை மற்றும் அதைச்சுற்றியுள்ள நிகழ்வுகளை கொண்டது என்றும் செய்திகள் வெளியானதை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படம் சமீபத்தில் உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் நாயகி குறித்த அறிவிப்பை சீனுராமசாமி வெளியிட்டுள்ளார். அவர் தான் காயத்ரி.

விஜய்சேதுபதி நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘ரம்மி’, ‘புரியாத புதிர்’, ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’, ‘சீதக்காதி’ உள்ளிட்ட படங்களில் நடித்த காயத்ரி தான் ஜிவி பிரகாஷ் ஜோடியாக நடிக்கவுள்ளதாக இயக்குனர் சீனுராமசாமி தெரிவித்துள்ளார். சீனுராமசாமியின் முந்தைய படமான ‘மாமனிதன்’ படத்திலும் காயத்ரிதான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நிலத்தை சுற்றி சன்னிலியோன் பேனரை வைத்த விவசாயி: காரணம் இதுதான்!

ஆந்திராவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது விலை நிலத்தை சுற்றி சன்னி லியோனின் ஆளுயர பேனரை வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஸ்ருதிஹாசன் வயிற்றில் எழுதி பழகிய காதலர்: வைரல் வீடியோ

உலக நாயகன் கமலஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் கடந்த சில மாதங்களாக சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார் என்பதும் இருவரும் மும்பையில் உள்ள வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள்

இந்தியாவின் லவ்லினா அபாரம்: மேலும் ஒரு பதக்கம் உறுதியானது!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஏற்கனவே இந்தியாவின் மீராபாய் சானு பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ள நிலையில்

'பீஸ்ட்' நாயகியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம் உலகப் புகழ் பெற்ற பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் தற்போது 'ராதேஷ்யாம்' 'சலார்' மற்றும்

முத்தம் கொடுப்பதால் நோய் பரவுமா? பகீர் சந்தேகத்திற்கு மருத்துவப் பதில்!

மனிதர்கள் முத்தத்தை ஒரு பெரிய உணர்ச்சிப் பெருக்காக கொண்டாடி வருகிறோம். காரணம் முத்தம்