close
Choose your channels

'உரிமைத்தொகை' குறித்து காயத்ரி ரகுராம் போட்ட ட்வீட் ....! வச்சு செய்யும் நெட்டிசன்கள்....!

Friday, June 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திமுக அரசு அறிவித்திருந்த உரிமைத்தொகை 1000 ரூபாய் குறித்து தனது கருத்தை பதிவிட்டிருந்த காயத்ரி ரகுராமை இணையவாசிகள் கலாய்த்து வருகிறார்கள்.

திமுக அறிவித்திருந்த வாக்குறுதி பட்டியலில் "ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும்" எனக் கூறியிருந்தார்கள். அந்தவகையில் திட்டத்திற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விரைவில் இவை செயல்படுத்தப்படும் என கட்சி சார்பாக கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இத்திட்டம் குறித்து பாஜக பிரமுகரான காயத்ரி ரகுராம் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது, "“ரேஷன் கடையில் அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் தருவோம் என்று கூறியிருந்தார்கள் அது பற்றி விசாரிக்கச் சென்றால் கொண்டைகடலை கொடுத்த கார்டுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் கொண்டைகடலை போடாத கார்டுக்கு இல்லை என்று கூறுகிறார்கள் . அதுமட்டுமில்லாமல் நான்கு எழுத்துக்கள்(NPHH) கொண்ட நபர்களுக்கு இல்லை என்றும் மூன்று எழுத்துக்கள் (HHH) கொண்ட நபர்களுக்கு மட்டுமே உள்ளது என்றும் கூறுகிறார்கள் . கொடுத்தால் அனைத்து பெண்களுக்கும் சமமாக கொடுங்கள் இல்லையென்றால் கொடுக்காதீர்கள்” இப்படிக்கு ஒரு பெண்.

முதல்வர், இதற்கு நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்? @mkstalin" என்று பதிவிட்டு தமிழக முதல்வரை டேக் செய்திருந்தார். இந்த பதிவு தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இணையவாசிகள் பலரும் காயத்ரியை கலாய்த்து கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Priority Household (PHH) என்றால் முன்னுரிமை உள்ள குடும்ப அட்டை, (NPHH) Non-Priority Household என்றால் முன்னுரிமை இல்லாத குடும்ப அட்டை என பொருள்படும் என உணவுத்துறை சார்ந்த வட்டாரங்கள் விளக்கமளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.