சிம்பு-ஹன்சிகா படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்!

  • IndiaGlitz, [Tuesday,May 28 2019]

ஹன்சிகா நடித்து வரும் 50வது படமான 'மஹா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும், அவரது சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ளதாகவும் வெளிவந்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தில் சிம்புவுக்கும் ஹன்சிகாவுக்கும் ஒரு பாடல் காட்சி இருப்பதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. இந்த பாடல் காட்சிக்கு பிரபல நடன இயக்குனரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவருமான காயத்ரி ரகுராம் நடனப்பயிற்சி அமைக்கவுள்ளார். இந்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். சிம்பு குழந்தை நட்சத்திரமாக இருந்தபோதே அவருக்கு காயத்ரி ரகுராம் நடனப்பயிற்சி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ஹன்சிகா, ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, கருணாகரன், நாசர், ஜெயப்பிரகாஷ், சாயாசிங் உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'மஹா' படத்தை ஜமீல் என்பவர் இயக்கி வருகிறார். ஜிப்ரான் இசையில் மதி ஒளிப்பதிவில் சத்யராஜ் நடராஜன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

முடிவுக்கு வந்தது யோகிபாபுவின் அடுத்த படம்!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்த 'தர்மபிரபு' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

விஜய்சேதுபதியின் 'சிந்துபாத்' குறித்த முக்கிய அறிவிப்பு

விஜய்சேதுபதி நடித்து முடித்துள்ள 'மாமனிதன்' மற்றும் சிந்துபாத்' ஆகிய இரண்டு படங்களும் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த இரு படங்களின் ரிலீஸ் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்

திருமணத்தில் பாட்டு பாடிய தந்தை திடீர் மரணம்: மகளிடம் உண்மையை மறைத்த உறவினர்

மகளின் திருமணத்தில் பாட்டு பாடிய தந்தை திடீரென மரணம் அடைந்த நிலையில் அவர் இறந்ததை மணமகளுக்கு தெரிவிக்காமல் உறவினர்கள் மறைத்து, திருமணத்தை முடித்து வைத்த சோக நிகழ்ச்சி ஒன்று கேரளாவில் நடைபெற்றுள்ளது

மகளுக்கு பாஜக தொண்டர் பாலியல் மிரட்டல்: மோடிக்கு நன்றி கூறிய பிரபல நடிகர்

தனது மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த பாஜக தொண்டர் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதால் பிரபல நடிகர், இயக்குனர் அனுராக் காஷ்யப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களின் வதந்தியால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்: சிம்பு அறிக்கை

ஊடகம் மற்றும் செய்தியாளர்கள் மத்தியில் எனது பயணம் மற்றும் பிணைப்பு நீண்ட காலத்துக்குரியது. என் தொழில் வாழ்க்கையை கடந்தும் என் வாழ்க்கையில் அது முக்கியமான பங்காற்றியுள்ளது.