அரசியலில் இருந்து விலகும் பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Monday,May 06 2019]

பிரபல நடிகை, நடன இயக்குனர், பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான காயத்ரி ரகுராம், கடந்த சில ஆண்டுகளாக பாஜகவில் இணைந்து பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: வாக்குவாதம், மற்றவர்களை குற்றம் சொல்லும் அரசியல் இன்று அதிகரித்துவிட்டது. குழந்தைகள் சண்டை போல உள்ள இன்றைய அரசியலை வழிநடத்த முதிர்ச்சியான தலைவர்கள் இல்லை.

தேர்தலில் மக்கள் என்ன முடிவெடுத்திருக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் இங்கு எதுவும் மாறுவது போல் தெரியவில்லை. யாரையும் ஆதர்சமாகப் பார்க்க முடியவில்லை. எனவே எனக்கு அரசியலில் ஆர்வம் குறைந்துவிட்டது. அரசியலில் விஸ்வாசமாக இருந்தாலும் கடைசியில் நாம் நகைச்சுவைப் பொருளாகிவிடுகிறோம்.

சினிமாவைவிட, அரசியலில் நடிகர்கள் அதிகம். போலியான போராளிகள், போலித் தலைவர்கள், போலித் தொண்டர்கள், போலி உறுப்பினர்கள் அதிகம் உள்ள அரசியலில் என்னால் 24 மணி நேரமும் நடித்துக் கொண்டிருக்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் நேரம் வரும்போது நான் அர்ப்பணிப்பு உணர்வுடன் மீண்டும் அரசியலில் ஈடுபடுவேன். அதுவரை அமைதியாக வெளியிலிருந்து அனைத்தையும் பார்த்து, ஆராய்ந்து, நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன். தீவிர அரசியலுக்கு இது நேரமில்லை என்று எனக்கு தெரிகிறது. இது எனது தனிப்பட்ட முடிவு. அனைவருக்கும் நன்றி” என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

More News

சிவகார்த்திகேயன் 16 படத்தில் விஷால் பட நாயகி!

சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் 16 வது திரைப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது

சிவகார்த்திகேயன் - பாண்டிராஜ் படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் வரும் 17ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அவர் தற்போது 'இரும்புத்திரை' இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனையில் சாதனை

உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா மே மாதம் 30ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தற்போது தொடங்கிவிட்டது.

வாக்காளர்களுக்கு தல மகளின் அன்புக்கட்டளை

இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் இன்று ஐந்தாம் கட்ட தேர்தல் ஏழு மாநிலங்களில் மொத்தம் 51 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.,

'நீயா 2' ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்: காரணம் இதுதான்!

ஜெய், வரலட்சுமி, கேதரின் தெரசா , ராய்லட்சுமி நடிப்பில் உருவான 'நீயா 2' திரைப்படம் மே 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது