செல்வராகவனுக்கு முத்தம் கொடுக்கும் வீடியோவை வெளியிட்ட கீதாஞ்சலி

பிரபல இயக்குனர் செல்வராகவன் மீண்டும் தனது சகோதரர் தனுஷூடன் இணைந்து ‘புதுப்பேட்டை 2’ படத்தை இயக்கவுள்ளார் என்றும், இதுகுறித்த அறிவிப்பு கொரோனா பிரச்சனை முடிவுக்கு வந்தவுடன் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ‘புதுப்பேட்டை 2’ படத்தின் திரைக்கதையை எழுதி கொண்டே இந்த ஊரடங்கு விடுமுறையை இயக்குனர் செல்வராகவன் தனது குடும்பத்தினர்களுடன் கழித்து வருகிறார்.

இந்த நிலையில் செல்வராகவனின் மனைவியும் இயக்குனருமான கீதாஞ்சலி, தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ஒருசில நொடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவில் அவர் செல்வராகவனுக்கு ஒரு ரொமான்ஸ் முத்தம் கொடுக்கும் காட்சி மட்டுமே உள்ளது.

மேலும் அவர் கூறியபோது, ‘இந்த விடுமுறையை அனைவரும் குடும்பத்தினர்களுடன் சந்தோஷமாக இருங்கள். ஒவ்வொரு நிமிடத்தையும் சந்தோஷமாக அனுபவியுங்கள். என் கணவருடன் வீட்டில் கைதியாய் இருப்பதை என் மிகவும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கின்றேன்’ என்று கீதாஞ்சலி குறிப்பிட்டுள்ளார்.

More News

சென்னை செய்தியாளர்கள் இருவருக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்ட உடன் பணிபுரிந்தவர்கள்!

நாளிதழ் ஒன்றில் பணிபுரிந்து வரும் பத்திரிக்கையாளர் ஒருவருக்கும், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்து வரும் உதவி ஆசிரியர் ஒருவருக்கும் என ஒரே நாளில் இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா நோய்

விஜயகாந்துக்கு முடிவெட்டி, ஷேவிங் செய்த பிரேமலதா: வைரலாகும் வீடியோ

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், ஊரடங்கு உத்தரவு காரணமாக முடிவெட்டாமல், ஷேவ் செய்யாமல் இருந்ததை அடுத்து அவருடைய மனைவியே அவருக்கு முடிவெட்டி ஷேவ் செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அம்மியில் மிளகு அரைத்து ரசம் செய்த பிரபல இயக்குனர்: வைரலாகும் வீடியோ

இந்த கொரோனா விடுமுறையில் படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் திரையுலகினர் பலர் விதவிதமான வீடியோக்களை தங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்

முகாமி தங்கியிருக்கும் சிறுமியின் பிறந்த நாளை கொண்டாட உதவிய சென்னை மாநகராட்சி

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திற்கு வேலை நிமித்தமாக

ரத்த புற்றுநோய் பாதித்த குழந்தைக்கு உதவி செய்த தமிழக முதல்வர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மிகவும் எளிமையானவர் என்றும் சாதாரணமானவர்கள் கூட மிக எளிதாக அவரை அணுகும் வகையில் நடந்து கொண்டிருக்கிறார்