ஸ்கேட்டிங் செய்யும்போது விழுந்து வாரிய விஜய் பட நாயகி… அதிர்ச்சி வீடியோ!

  • IndiaGlitz, [Wednesday,March 10 2021]

தமிழில் இயக்குநர் ஷங்கர் படமான “பாய்ஸ்“ படத்தில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. இவர் தளபதி விஜய் நடித்த “சச்சின்“ படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். அப்படத்தின் ஷாலினியையும் “சந்தோஷ் சுப்பிரமணியம்“ படத்தின் ஹாசினியையும் இன்னும் தமிழ் ரசிகர்கள் மறந்து இருக்க முடியாது. இப்படி தன்னடைய க்யூட் நடிப்பினால் வலம் வந்தவர் அடுத்து “உத்தரமபுத்திரன்“, “வேலாயுதம்“ போன்ற ஒரு சில படங்களில் நடித்து இருந்தார்.

தமிழ் தவிர தெலுங்கு, இந்தி போன்ற மொழிப் படங்களிலும் இவர் கவனம் செலுத்தி முன்னணி நடிகையாக இருந்து வந்தார். பின்னர் தன்னுடன் நடித்த இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு ஆண் குழந்தைகளுடன் சந்தோஷமாக தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

எப்போதும் குடும்பம், குழந்தைகள், திரைப்பட விழாக்கள் என இன்றைக்கும் தனக்கே உரிய குறும்பு தனங்களோடு வலம் வரும் ஜெனிலியா தன்னுடைய குழந்தைகளுக்காக ஸ்கேட்டிங் கற்றுக் கொண்டு இருக்கிறார். இப்படி தான் கற்றுக்கொண்ட ஸ்கேட்டிங் திறமையை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிடலாம் என எண்ணியிருக்கிறார். ஆனால் இது கடைசியில் அவருக்கே டிவிஸ்டாக முடிந்து இருக்கிறது. ஸ்கேட்டிங் செய்யும்போது நிலை தடுமாறி தற்போது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது.

ஆனால் தனக்கு ஏற்பட்ட இந்த வலியையும் பொருட்படுத்தாத ஜெனிலியா எப்போதும் போல அதே குறும்பு சிரிப்புடன் இந்த வெற்றிக் கதை தோல்வியில் முடிந்து விட்டது. ஆனால் தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்வேன் எனக் கூறி வீடியோ பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் “ஹாசினி” கொஞ்சம் கூட மாறவில்லை என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

More News

விக்ரம்-கார்த்திக் சுப்புராஜ் படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு!

சியான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் ஆகிய இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளனர் என்பதும் இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே 

அகில இந்திய சாதனை பட்டியலில் இடம்பெற்ற 'குக் வித் கோமாளி' பவித்ரா!

அகில இந்திய அளவில் வரையப்பட்ட மிகப் பெரிய சுவர் ஓவியங்களில் 'குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குகொண்ட பவித்ராவின் ஓவியமும் இடம்பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது 

ஷங்கர்-ராம்சரண் தேஜா படத்திற்கு அனிருத்துக்கு பதில் இவரா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண்தேஜா நடிக்கும் திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே

சின்னத்தல'யுடன் எடுத்த புகைப்படம்: மகிழ்ச்சியுடன் பகிர்ந்த 'மாஸ்டர்' நடிகை!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த '96' என்ற படத்திலும் தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்திலும் நடித்தவர் நடிகை கௌரி கிஷன். இவர் சமீபத்தில் தனது டுவிட்டரில் சிஎஸ்கே வீரர் சின்ன தலயுடன்

பும்ராவை திருமணம் செய்யப்போவது இந்த தொலைக்காட்சி தொகுப்பாளியா?

தமிழ் நடிகை அனுபமா பரமேஸ்வரன் என்பவரை பிரபல கிரிக்கெட் வீரர் பும்ரா திருமணம் செய்யப் போவதாக வதந்திகள் கிளம்பிய நிலையில் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில்