அதிமுக, திமுகவில் வாரிசு வேட்பாளர்கள்: ஒரு பார்வை

இந்திய அரசியலில் வாரிசு அரசியல் என்பது சர்வசாதாரணமாகிவிட்டது. குறிப்பாக கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் வாரிசு அரசியல்வாதிகள் தலையெடுத்து வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது அதிமுக, திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதில் அதிமுகவில் 4 வாரிசு வேட்பாளர்களும் திமுகவில் 7 வாரிசு வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக வாரிசு வேட்பாளர்கள் விபரம்:

தேனி - துணை முதலமைச்சர் ஓ.பன்னீசெல்வம் மகன் ரவீந்திரநாத் குமார்
தென் சென்னை - அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன்
மதுரை - ராஜன் செல்லப்பா மகன் ராஜசத்யன்
நெல்லை - பி.எச்.பாண்டியன் மகன் மனோஜ்பாண்டியன்

அதேபோல் திமுகவின் வாரிசு வேட்பாளர்களின் விபரம் பின்வருமாறு:

தூத்துகுடி: கருணாநிதியின் மகள் கனிமொழி
வடசென்னை: ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி
மத்திய சென்னை - முரசொலி மாறன் மகன் தயாநிதி மாறன்
தென்சென்னை- தங்கபாண்டியன் மகள் தமிழச்சி தங்கபாண்டியன்
வேலூர் - துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த்
கள்ளக்குறிச்சி - பொன்முடி மகன் கவுதம சிகாமணி
கடலூர்: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மகன் கதிரவன்

மேற்கண்ட வாரிசு பட்டியலில் தென்சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் மற்றும் தங்கபாண்டியன் மகள் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் நேரடி போட்டியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'தளபதி 63' படப்பிடிப்பில் ரசிகர்களின் மாஸ் ரியாக்சன்

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் தினமும் நூற்றுக்கணக்கான விஜய் ரசிகர்கள் கூடி,

அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து ரங்கராஜ் பாண்டே கூறியது என்ன?

அஜித், வித்யாபாலன் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தில் பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே முக்கிய வேடத்தில் நடித்து வருவது தெரிந்ததே

தேர்தல் 2019: கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி எது?

கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கிய ஒரு வருடத்தில் முதல் தேர்தலை சந்திக்கவுள்ளார். கடந்த ஐம்பது ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்து வந்த திராவிட கட்சிகளை எந்தவித கூட்டணியும் இல்லாமல்

நானும் செளகிதார் தான்: 'வாட்ச்மேன்' படக்குழுவினர்களின் வைரல் போஸ்டர்

கடந்த சில நாட்களாக செளகிதார் என்ற வார்த்தையை இந்திய மக்கள் அனைவரும் கேள்விப்பட்டு வருகின்றனர். பிரதமர் மோடியின் இந்த வார்த்தை இந்தியா முழுவதும் வைரலாகி வருகிறது. 

பாமக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் 7 மக்களவை தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியை பெற்ற பாமக, முதல்கட்டமாக ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.