கெட் லாஸ்ட்: ஆரவ்வை பார்த்து ஆத்திரமாக கூறும் ஓவியா

  • IndiaGlitz, [Wednesday,August 02 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும்போது இல்லாத டென்ஷன் இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோவை பார்த்தால் வந்துவிடும்போல தெரிகிறது. அரைநிமிட வீடியோ நம்மை அதிக நேரம் யோசிக்க வைத்து சிலசமயம் குழப்பத்தையும் தருகிறது.

அந்த வகையில் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ்-ஓவியா காதல் பிரச்சனை குறித்து அலசப்பட்டது. இறுதியில் ஓவியா காதலில் பிடிவாதமாக இருப்பது போன்றும், ஆரவ் வெறும் நண்பர்களாக இருப்பது போன்றும் காண்பிக்கப்பட்டது.

மேலும் ஓவியா, ஆரவ் உட்கார்ந்திருக்கும்போது அவருக்கு பின்பக்கம் வந்து தோளை பிடித்ததை ஒரு பெரிய குற்றமாக மற்ற பங்கேற்பாளர்களிடமும், பிக்பாஸிடம் அவர் கூறினார். ஆனால் இன்றைய புரமோவில் அதேபோல் ஜூலி ஆரவ்வுக்கு தலையில் மசாஜ் செய்து கொண்டிருக்கின்றார். இது ஆரவ்வுக்கு குற்றமாக தெரியவில்லை.

மேலும் பலர் முன்னிலையில் ஓவியா, ஆரவ்விடம் கெஞ்சுவது போன்றும் அதை மற்ற பங்கேற்பாளர்கள் சந்தோஷத்துடன் பார்த்து ரசிப்பது போன்றும், ஓவியாவின் பேச்சை ஆரவ் காது கொடுத்து கேட்காமல் வெளியேறுவது போன்ற காட்சிகளும் இன்றைய புரமோவில் உள்ளது. கடைசியா 'ஓவியா இது எனக்கு தேவையா? என்று பிந்து கேட்பதும், ஆரவ்வை கெட்லாஸ்ட் என்று ஓவியா ஆத்திரத்துடன் கூறுவதுடன் இன்றைய புரமோ வீடியோ முடிகிறது.

More News

விஜய் டிவியின் இந்த டுவீட் தேவையா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு பங்கேற்பாளர் வெளியேறுவது தெரிந்ததே...

ஓவியாவை ஒட்டுமொத்தமாக கார்னர் செய்வது ஏன்?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டாராக ஓவியா கருதப்பட்டு வரும் நிலையில் இதுவரை பங்கேற்பாளர்கள் மட்டுமே ஓவியாவை கார்னர் செய்து வந்தனர்...

கமல்ஹாசனின் டுவீட்டுக்கு என்ன அர்த்தம்: தலையை பிய்த்து கொள்ளும் ரசிகர்கள்

கமல்ஹாசன் சாதாரணமாக டுவீட் போட்டாலே பல பேருக்கு புரியாது. அதிலும் அரசியல் குறித்து அவர் பேச ஆரம்பித்தவுடன் போடும் டுவீட்டுக்கள் பல புரிவதில்லை...

அஜித்துக்கும் விஜய்சேதுபதிக்கும் ஒரு வாரம் தான் வித்தியாசம்! எப்படி தெரியுமா?

தல அஜித் நடித்துள்ள 'விவேகம்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி ரிலீஸ் ஆவது அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுவிட்டதால் அதற்கு முன்பே சுமார் 10 திரைப்படங்கள் அவசர அவசரமாக ரிலீஸ் ஆகின்றது...

முட்டை ஊழல் விவகாரம்: கமல் குற்றச்சாட்டுக்கு கலெக்டர் பதில்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் மாணவர்களுக்கு அழுகிய சத்துணவு முட்டைகள் வழங்கியதை கமல் நற்பணி மன்றத்தினர் தடுத்து நிறுத்தியதாக வெளிவந்த தகவல்களை சற்றுமுன் பார்த்தோம்.