close
Choose your channels

அடுத்த ரவுண்டுக்கு தயாராகிட்டாங்க போல...  கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியிருக்கும் சீன மீன் மார்க்கெட்!!!

Saturday, June 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அடுத்த ரவுண்டுக்கு தயாராகிட்டாங்க போல...  கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியிருக்கும் சீன மீன் மார்க்கெட்!!!

 

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் புதிய வகை கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவி வருவதால் மீண்டும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. தற்போது பரவிவரும் புதிய கொரோனா வைரஸ்கள் மிக விரைவாக அறிகுறிகளை வெளிப்படுத்து வதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஒரே வாரத்தில் 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு அந்நகரில் கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது. இதனால் விமானப் போக்குவரத்து தடை செய்யப் பட்டு இருக்கின்றன. பள்ளிகள் மூடப்பட்டு இருக்கிறது. மற்ற மாகாணங்களில் இருந்து பெய்ஜிங் முற்றிலும் தனிமைப்படுத்தப் பட்டு இருக்கிறது.

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள ஜின்ஃபாடி என்ற உணவு மார்க்கெட்டு தற்போது அச்சத்தை ஏற்படுத்தும் இடமாக மாறியிருக்கிறது. இந்த மார்க்கெட் கிட்டத்தட்ட 160 கால்பந்து மையங்களை கொண்டது போல மிகப் பிரம்மாண்டமான இடமாக இருக்கிறது. இந்த உணவகத்தில் காய்கறி, இறைச்சிகள், பழங்களை விற்கும் பல தளங்கள் இருக்கின்றன. அவற்றில் கடல் உணவுகளை விற்பனை செய்யும் ஒருதளம் தற்போது கொரோனா வைரஸை பரப்பும் ஹாட்ஸ்பாட்டாக மாறியிருக்கிறது என கூறப்படுகிறது. இறைச்சி விற்பனை செய்யும் இடங்கள் மிகவும் ஈரப்பதத்துடன் மற்றும் வெப்பநிலை குறைவாக காணப்படும் என்பதால் கொரோனா வைரஸ் மிக எளிதாக தங்கி வாழ்வதற்கு வாய்ப்பிருப்பதாகவும் கருதப்படுகிறது.

சீனாவின் நோய்த்தொற்று நிபுணர் வு ஸீன்யூ குறைவான வெப்பநிலையில் அந்த இடம் இருப்பதால் கொரோனா நோய்த்தொற்று எளிதாக பரவியிருக்கலாம் என எச்சரித்து உள்ளார். அதிலும் அங்குள்ள சாலமன் மீன்களை விற்பனை செய்யும் ஒரு கடை மிகவும் மோசமானதாகக் கருதப்படுகிறது. சாலமன் மீன்களை சுத்தம் செய்யும் இடம் அல்லது ஊழியர்களின் பொருட்கள், உடைகள் போன்றவற்றில் கொரோனா வைரஸ் தங்கி நோயை ஏற்படுத்தி இருக்கலாம் என்ற அச்சமும் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் இருந்து சாலமன் மீன்களை இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜின்ஃபாடி உணவுத்தளம் முழுவதுமே மிகவும் குறைவான வெப்பநிலையுடனே இருக்கிறது. இதனால் அங்கு வந்து சென்றோர்களைப் பற்றிய விவரத்தையும் அந்நாட்டு சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருகின்றனர். கடந்த மே 30 ஆம் தேதி முதல் அந்த உணவு மார்க்கெட்டுக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் மக்கள் வந்து சென்று இருக்கின்றனர் என கணக்கிடப் பட்டுள்ளது. மேலும் ஈரப்பதமான விற்பனை நிலையங்களில் வேலை பார்க்கும் 8 ஆயிரம் ஊழியர்களுக்கும் தற்போது கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. பெரிய விற்பனை நிலையம் மற்றும் வந்துசெல்வோர் அதிகம் என்பதால் ஜின்ஃபாடி விற்பனை நிலையம் தலைவலியை ஏற்படுத்தும் புது விவகாரமாக மாறியிருக்கிறது.

மேலும் 1200 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. நகரத்தில் 70 விழுக்காடு அளவிற்கு மற்ற போக்குவரத்தும் முடக்கப் பட்டு இருக்கிறது. இதைத்தவிர பெய்ஜிங் தலைநகரைப் பற்றி இன்னொரு அதிர்ச்சியான தகவலும் வெளியாகி இருக்கிறது. தலைநகரில் பரவிவரும் புதிய வகை வைரஸ்கள் மிகவும் வலுப்பெற்றவையாக இருக்கிறது என்றும் அதன் மரபணு மாறியிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் சீன விஞ்ஞானிகள் பெய்ஜிங்கில் பரவிவரும் 3 புதிய கொரோனா வைரஸின் மரபணுக்களை வரிசைப்படுத்தி WHO விடம் தகவல் தெரிவித்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.