close
Choose your channels

விஜய்சேதுபதி, த்ரிஷாவின் போட்டியை தவிர்த்த ஆர்யா

Friday, July 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த வெள்ளியன்று வெளியான கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம் மற்றும் சிவாவின் 'தமிழ்ப்படம் 2' ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வரும் நிலையில் இன்று 'போத' என்ற ஒரே ஒரு தமிழ்ப்படம் மட்டுமே ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த நிலையில் அடுத்த வாரம் அதாவது ஜூலை 27ஆம் தேதி விஜய்சேதுபதியின் 'ஜூங்கா', ஆர்யாவின் 'கஜினிகாந்த்' மற்றும் த்ரிஷாவின் 'மோகினி' ஆகிய படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 'ஜூங்கா' மற்றும் 'மோகினி' ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டு புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் 'கஜினிகாந்த்' படத்தின் ரிலீஸ் உறுதி செய்யப்படாமல் இருந்தது

இந்த நிலையில் ஜூலை 27ஆம் தேதி ரிலீஸ் போட்டியில் இருந்து 'கஜினிகாந்த்' விலகிவிட்டதாகவும், அதற்கு பதில் இந்த படம் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி சோலோவாக வெளியாகவுள்ளதாகவும் கூறபடுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்கப்படுகிறது. மேலும் அதற்கு அடுத்த வாரம் அதாவது ஆகஸ்ட் 10ஆம் தேதி கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' மற்றும் நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.