இளையராஜா, ரஹ்மானுக்கு கிடைக்காத பெருமையை பெற்ற ஜிப்ரான்

  • IndiaGlitz, [Wednesday,June 07 2017]

சமீபத்தில் மரணம் அடைந்த கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்கள் மிகப்பெரிய கவிஞராக அனைவராலும் போற்றப்படும் வகையில் இருந்தாலும் அவர் திரைப்படத்திற்கு இதுவரை ஒரு பாடல் கூட எழுதவில்லை. இசைஞானி இளையராஜா, ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இருவருமே அப்துல் ரகுமான் அவர்களுக்கு நெருக்கமானவர்களாக இருந்தனர். இருந்தும் பலமுறை அவர்கள் கேட்டுக்கொண்டும் திரைப்படத்திற்கு பாடல் எழுத அவர் சம்மதிக்கவில்லை.
இந்த நிலையில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைக்காத அந்த பாக்கியம் இசையமைப்பாளர் ஜிப்ரான் அவர்களுக்கு கிடைத்துள்ளது. அப்துல் ரகுமான் மரணம் அடைவதற்கு ஒருசில நாட்களுக்கு முன்னர் அவரை சந்தித்த ஜிப்ரான், மெட்டுக்கு பாட்டு எழுதவில்லை என்றாலும் பரவாயில்லை, உங்களுடைய தனிப்பாடல் ஒன்றை கொடுங்கள், அதற்கு இசையமைத்து நான் பயன்படுத்தி கொள்கிறேன் என்று கேட்டுக்கொள்ள, அப்துல் ரகுமான் ஒரு பாடலை கொடுத்துள்ளார். அந்த பாடல் விரைவில் வெளிவரவுள்ள 'ஆண்தேவதை' என்ற படத்தில் இடம்பெறவுள்ளது.
'மலரின் நறுமணம் போகுமிடம், குழலின் பாடல்கள் போகுமிடம்' என்று ஆரம்பிக்கும் இந்த பாடலுக்கு இசையமைத்து அவரிடம் போட்டு காண்பிக்கும் முன்பாகவே அவர் மரணம் அடைந்துவிட்டதாகவும், அவருடைய முதல் திரையிசை பாடலை அவரிடம் காட்ட முடியாத நிலைக்கு தான் மிகவும் வருந்துவதாகவும் ஜிப்ரான் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். மேலும் இந்த பாடலை இசையுடன் அவர் அதில் பதிவு செய்தும் உள்ளார். அப்துல் ரகுமான் எழுதிய அந்த பாடல் இதுதான்:
மலரின் நறுமணம் போகுமிடம்
குழலின் பாடல்கள் போகுமிடம்
அணைந்த சுடர்கள் போகுமிடம்
அதுதான் நாமும் போகுமிடம்
மலரின் நறுமணம் போகுமிடம்
குழலின் பாடல்கள் போகுமிடம்
அணைந்த சுடர்கள் போகுமிடம்
அதுதான் நாமும் போகுமிடம்
போகுமிடம் நாம் போகுமிடம் நாம்
போகுமிடம் நாம் போகுமிடம்
போகுமிடம் நாம் போகுமிடம் நாம்
போகுமிடம் நாம் போகுமிடம்
மாதா கோயில் ஜெப ஒலி
பள்ளிவாசல் அழைப்பொலி
இந்து ஆலய மணி ஒலி
எல்லாம் ஒன்றாய் போகுமிடம்
மாதா கோயில் ஜெப ஒலி
பள்ளிவாசல் அழைப்பொலி
இந்து ஆலய மணி ஒலி
எல்லாம் ஒன்றாய் போகுமிடம்
போகுமிடம் நாம் போகுமிடம் நாம்
போகுமிடம் நாம் போகுமிடம்
போகுமிடம் நாம் போகுமிடம் நாம்
போகுமிடம் நாம் போகுமிடம்
அந்த இடம் நம் சொந்த இடம்
அணைத்து பொருளும் வந்த இடம்
அங்கே மதங்கள் ஏதுமில்லை
அமைதிக்கென்றும் சேதமில்லை
அந்த இடம் நம் சொந்த இடம்
அணைத்து பொருளும் வந்த இடம்
அங்கே மதங்கள் ஏதுமில்லை
அமைதிக்கென்றும் சேதமில்லை
மதுவும் வண்டும் வேறில்லை
கண்ணீர் புன்னகை வேறில்லை
அதுவும் இதுவும் வேறில்லை
அனைத்தும் ஒன்றே உண்மையிலே
போகுமிடம் நாம் போகுமிடம் நாம்
போகுமிடம் நாம் போகுமிடம்
போகுமிடம் நாம் போகுமிடம் நாம்
போகுமிடம் நாம் போகுமிடம்

More News

ஆட்டுக்குட்டியின் பசிக்காக ரூ.66,000ஐ இழந்த பரிதாப நபர்

பொதுவாக ஒரு ஆட்டுக்குட்டியின் பசியை போக்க ரூ.50 அல்லது ரூ.100க்கு புல் வாங்கி போட்டாலே போதும்.

ஒரே படத்தில் காஜல்அகர்வால் - எமிஜாக்சன்

ஒரே படத்தில் இரண்டு அல்லது மூன்று நடிகைகள் இணைந்து நடிப்பது கோலிவுட் திரையுலகில் சகஜமான ஒன்றே.

இயக்குனர் மணிரத்னம் அவர்களின் 9 வயது நண்பர் இவர்தான்

பிரபல இயக்குனர் மணிரத்னம் அவர்கள் தனிமையை விரும்புபவர் என்பதும் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ளும்படி மிகச்சிலரே இருக்கின்றனர் என்பதும் கோலிவுட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்த உண்மை இந்த நிலையில் மணிரத்னம் அவர்களுக்கு 9 வயதில் ஒரு நண்பர் இருக்கும் விஷயம் தற்போது தெரியவந்துள்ளது. அவர்தான் பிரபல ஒளிப&

இவருக்கு எல்லோரும் ஓட்டு போடுங்கள்: நடிகை தமன்னா வேண்டுகோள்

தமிழகத்தில் தற்போது இருக்கும் அரசியல் குழப்பத்தில் எப்போது தேர்தல் வரும், அடுத்து யாருக்கு ஓட்டு போடலாம் என தமிழக மக்கள் தீவிர சிந்தனையில் இருக்கும் நிலையில் தமன்னா தனது தோழிக்கு ஓட்டு போடுமாறு சமூக வலைத்தளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்...

'சாவித்ரி' படத்திற்காக கீர்த்திசுரேஷ் செய்யும் தியாகம்

பிரபல நடிகை கீர்த்திசுரேஷ் தற்போது நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'மகாநதி' என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ஸ்டில்களில் இருந்து சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் எந்த அளவுக்கு கச்சிதமாக பொருந்தினார் என்பதை பார்க்க முடிந்தது...